search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளம்பர பலகைகள் அகற்றம்"

    • 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
    • சென்னையில் 20 அடி அகலம் 12 அடி உயரம் விளம்பர பலகையின் அதிகபட்ச அளவாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    விளம்பர பேனர்களால் ஏற்படும் உயிரிழப்புகள் தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடுமுழுவதும்எ ழுந்துள்ளது. மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விளம்பர பேனர் விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னையிலும் கடந்த 2019-ம் ஆண்டு விளம்பர பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம் பெண் பரிதாபமாக இறந்தார். அந்த சம்பவத்தால் விளம்பர பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டும் தடை விதித்ததுடன் தீவிரமாக கண்காணிக்கும் படியும் உத்தரவிட்டது.

    இதனால் கொஞ்சம் குறைந்த விளம்பர பேனர்கள் மீண்டும் அதிகரித்து விட்டன. இது நல்ல வருமானம் கொழிக்கும் தொழிலாக இருப்பதால் பலர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்கு அதிகாரமட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் செல்வாக்கு இருப்பதால் அவர்கள் எதையும் கண்டு கொள்வதில்லை.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்கள எதுவும் முறையான அனுமதி பெறவில்லை.

    மும்பை சம்பவத்தை தொடர்ந்து சென்னையிலும் அனுமதி இல்லாத விளம்பர பேனர்களை அகற்றும்படி சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

    மாநகராட்சி அனுமதி இல்லாமல் வைக்கப்பட் டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற மண்டல அலுவலகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.



    சாலையோரம், பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லூரிகள், பஸ் நிறுத்தங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சென்னையில் 20 அடி அகலம் 12 அடி உயரம் விளம்பர பலகையின் அதிகபட்ச அளவாக இருக்க வேண்டும். சாலை சிக்னல்களில் விளம்பர பலகை அமைக்கக் கூடாது உள்ளிட்ட பல விதிமுறைகள் உள்ளன.

    விளம்பர பலகை நிறுவ இதுவரை 1,100 விண்ணப்பங்கள் வந்துள்ளது. அதில் 40 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை பரிசீலனையில் உள்ளது.

    கடந்த 2 நாட்களில் அனுமதியின்றியும், உரிய அளவை தாண்டியும் வைக்கப்பட்ட 460 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×