என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முகம்"
- முகத்தில் களைப்பு தெரியாமல் இருக்க, மேக்கப் பயன்படுகிறது.
- இந்த வகை மேக்கப்கள் போட்டோ ஷூட்டுகளுக்கு ஏற்றவை.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழைய மொழி. அகத்தில் சோர்வு இருந்தாலும் முகத்தில் தெரியக்கூடாது என்பது புது மொழி.
இந்த புதுமொழிக்கு ஏற்ப, முகத்தை பொலிவாக்க பல்வேறு மேக் அப் கலைகள் வந்து உள்ளன. அதில், கான்டூரிங் மேக்கப் முக்கியமானது.
பொதுவாக, திருமணம் நிச்சயதார்த்தம், வரவேற்பின் போது மணப்பெண்ணால் சரியாக தூங்க முடியாது சோர்வாக – களைப்பாக இருப்பார். இதை அவர் முகமே காட்டிக் கொடுத்துவிடும்.
அந்த சூழலில் முகத்தில் களைப்பு தெரியாமல் இருக்க, மேக்கப் பயன்படுகிறது.
மேக்கப்களில் முகத்தில் தண்ணீர் பட்டாலோ அல்லது வியர்வை வழிந்தாலோ கலைந்து விடும். இந்த நிலையை மாற்ற, புதிய முறைகள் அறிமுகமாகிவிட்டன.
வாட்டர் ஃப்ரூப் மேக்கப், ஏர் பிரஷ் மேக்கப். எச்.டி மேக்கப், கான்டூரிங் மேக்கப் வகைகள் என பல உண்டு. இவற்றில், முதலாவது மேக்கப் வகையான வாட்டர் ஃப்ரூப் மேக்கப் முகத்தில் தண்ணீர் பட்டாலும் மேக்கப் கலையாமல் இருக்கும்.
'ஏர் பிரஷ் மேக்கப்' என்பது தனி வகை. இது முகத்தில் உள்ள மருக்கள், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள், சருமத் திட்டுகள் ஆகியவற்றை மறைத்து விடும். முகம் முழுக்க ஒரே கலரில் அழகாக தோன்றும்.
இன்னொன்று எச்.டி மேக்கப். இந்த வகை மேக்கப்கள் போட்டோ ஷூட்டுகளுக்கு ஏற்றவை. இது முகத்தை வண்ணமயமாக காட்டும்.
அடுத்து கான்டூரிங் மேக்கப். இதை கரெக்ட்டிங் மேக்கப் என்றும் சொல்வது உண்டு. சப்பையான நாசியை எடுப்பாகக் காட்டவும், சற்று பூசினாற் போல இருக்கும் கண்ணங்களை ஒல்லியாக காட்டவும் உதவும்.
- உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- தண்ணீர் சத்து நிறைந்த பழங்கள், பழச்சாறுகளை பருகலாம்.
முகத்தில் அதிகம் வியர்க்கிறது என்றால் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் பாதிக்கப்பட்டிருக்கலாம். உடல் அதிக வெப்பமாகும்போது தானாகவே ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி உண்டாகிறது. ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி தான் முகத்தில் அதிக வியர்வை வர காரணம்.
உடலில் அதிக வெப்பம் உண்டாகும்போது அதனை தணிக்க அதிகப்படியான வியர்வை சுரக்கிறது. முகத்தில் அதிகம் வியர்ப்பவர்களுக்கு தலையிலும் வேர்க்கும். காரணம் இந்த ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி முகம் மற்றும் தலையை தான் அதிகம் பாதிக்கிறது. சிலருக்கு மரபணு மூலமாகவும் முகத்தில் அதிகம் வேர்க்கும். சிலருக்கு அதிக உடல் பருமன் காரணமாகவும் வேர்க்கலாம். நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கும் முகத்தில் வேர்க்கலாம்.
அதிகப்படியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். கடினமான உடல் பயிற்சிகளை மேற்கொள்ளுவதாலும் வியர்வை முகத்தில் சுரக்க செய்யும்.
உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். உடல் வெப்பமாக இருக்கும்போது உடலை குளிர்ச்சியாக்க தன்னை தானே உடல் வியர்வை சுரக்க செய்யும். அதனால் உணவு முறைகள் மூலம் குளிர்ச்சியானவைகளை உண்ண வேண்டும்.
உடல் மற்றும் முகம் வியர்க்கும்போது குளிக்கலாம். முகத்தை அடிக்கடி குளிர்ச்சியான நீரில் கழுவலாம். இதனால் வியர்வை வடிவதை தடுக்க முடியும்.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சத்து நிறைந்த பழங்கள், பழச்சாறுகளை பருகலாம். இது உடலை குளிர்ச்சியாக வைத்து வியர்வை வராமல் தடுக்கும்.
முகத்தில் எண்ணெய் வடிதல் இருந்தாலும் முகத்தில் அதிகமாக வேர்க்கும். அதனால் முகத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவுவது நல்லது.
- முகத்தை அதிகமாக கழுவினாலும் எண்ணெய் வடியும்.
- மேக் அப் அதிகமாக போடுவதை தவிர்க்கவும்.
நம் முகம் பளிச்சென்று, எண்ணெய் வடியாது இருக்கவே நாம் விரும்புகிறோம். எண்ணெய் வடியும் முகம் கொண்டவர்கள் சோர்வாக காட்சி தருவதால் சங்கடமடைகிறார்கள். மேக் அப் செய்தாலும் பயனற்று போகிறது.
சீபம் எனும் திரவம் சருமத்தில் சுரப்பதால் எண்ணெய் வடிவது போல் தோற்றமளிக்கிறது. சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க சீபம் உதவினாலும், அதிகமாக சுரந்தால் முகத்தை மந்தமாக மாற்றிவிடும்.
உங்கள் முகம் எண்ணெய் வடியும் தன்மை கொண்டதா என்பதை சில அறிகுறிகள் கொண்டு அறியலாம். சருமத் துளைகள், முகத்தில் பிசுபிசுக்கும் தன்மை, 'பிளாக்ஹெட்' எனப்படும் முகத்தில் தோன்றும் கரியநிற முற்கள், முகப்பருக்கள், முரடான சருமம் ஆகியவை உங்கள் முகம் எண்ணெய் வடியும் தன்மை கொண்டதை குறிக்கலாம்.
சரிவிகித உணவு உட்கொள்வது அவசியமாகும். எண்ணெயில் பொரித்த உணவுகள், இனிப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், மேக் அப் அதிகமாக போடுவதை தவிர்க்கவும். இப்பிரச்சனை நீடித்தால் மருத்துவரை அணுகவும்.
முகத்தில் எண்ணெய் வடிய காரணங்கள் என்ன?
• உங்கள் குடும்பத்தில் யாருக்காவது எண்ணெய் வடியும் முகம் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கும் அவ்வாறே இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில், இது மரபுவழியாக வர வாய்ப்புண்டு.
• பருவ வயதினர் மற்றும் இளைஞர்களை காட்டிலும் வயதானவர்களுக்கு இப்பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் குறைவு தான். வயது கூடும் போது சருமத்தில் எண்ணெய் தன்மை குறையும்.
• பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் சருமத்தை பெருமளவு பாதிக்கிறது. வெப்பமான, ஈரப்பதம் உள்ள பகுதிகளில் வசிப்போருக்கு முகத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும். அதனால் தான் குளிர்காலத்தை காட்டிலும் கோடையில் எண்ணெய் அதிகமாக சுரக்கிறது.
• முகத்தை அதிகமாக கழுவினாலும் எண்ணெய் வடியும்.
• ஆண்ட்ரோஜன் எனும் ஹார்மோன் தான் சருமத்தில் எண்ணெய் சுரக்கச் செய்கிறது. பருவ வயதிலும் பிரசவ காலத்திலும் இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும்.
• மன இறுக்கம், உடல் நலக்குறைவு காரணமாகக் கூட முகத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும்.
• சருமத் துளைகள் பெரிதானால் எண்ணெய் அதிகமாக சுரக்கும். வயது கூடும்போது இப்படி ஆக வாய்ப்புண்டு.
• சருமத்தில் ஈரப்பதம் குறைந்தால், சருமம் வறண்டு விடும். இதனால் எண்ணெய் அதிகம் சுரக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்