search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோகினி ஏகாதசி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துவாதசி அதிகாலை பாரணை செய்தால் திருமாலின் திருவருளைப்பெறலாம்.
    • இன்று ஏகாதசி விரதத்தில் அரிசி முதலிய தானியங்களை உண்ணக்கூடாது.

    இன்று வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினமாகும். தசமி நாளான மதியம் முதல் ஏகாதசி உபவாசம் இருந்து, துவாதசி அதிகாலை பாரணை செய்தால் திருமாலின் திருவருளைப்பெறலாம். நாளைய ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்று பெயர். இதை கடைப்பிடித்தால் எத்தகைய பாவ விளைவுகளில் இருந்தும் விடுபட்டு விட முடியும். சீதையைப் பிரிந்த ராமரிடம் வசிஷ்டர், "ராமா! வருகின்ற வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி விரதம் இருந்தால், உன்னுடைய எண்ணம் நிறைவேறும். பிரிந்த சீதை உன்னிடம் வந்து சேருவாள்" என்று அறிவுறுத்தினார். அதை ஏற்று ஸ்ரீ ராமபிரானே, முறையாக, ஏகாதசி விரதம் இருந்தார் என்ற சிறப்பு இந்த ஏகாதசிக்கு உண்டு.

    இன்று ஏகாதசி விரதத்தில் அரிசி முதலிய தானியங்களை உண்ணக்கூடாது . முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், கஞ்சி, பால், பழம் அல்லது உடைக் கப்பட்ட அரிசியினால் செய்யப்பட்ட உப்புமா போன்றவற்றை சாப்பிடலாம். பெருமாளின் நாம சங்கீர்த் தனத்தைப் பாடலாம். மிக முக்கியமாக துவாதசி பாரணையின்போது வாழை இலை, வாழைக்காய் போன்றவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். அதற்குப் பதிலாக நெல்லிக்காயைப் பயன்படுத்தலாம்.

    ×