search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரீரிலிஸ்"

    • படையப்பா படத்தை கண்டுகளிக்காத தமிழ் சினிமா ரசிகர்களை இருந்திருக்க முடியாது
    • படையப்பா படம் ரீரிலீஸ் ஆகும் என்ற தகவல் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

    வெற்றிபெற்ற திரைப்படங்களை ரீரிலிஸ் செய்யும் டிரெண்ட்டில் கில்லி, பில்லா உள்ளிட்ட பல படங்கள் ரீரிலிஸ் ஆனது. கில்லி திரைப்படம் மறுவெளியீட்டிலும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

    இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் 10 ஏப்ரல் 1999 அன்று தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திரையரங்கில் வெளியிடப்பட்டது.

    கே.எஸ், ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் சிவாஜி கணேசன், லட்சுமி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் சித்தாரா மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து மாபெரும் வெற்றி பாடமாக திரையரங்குகளை அதிரவைத்தது.


    இந்த படத்தில் இடம் வாயில் மவுத் ஆர்கன், கையில் காப்பு என படத்தின் முதல் பாதியில் துறுதுறுவென இருப்பார் ரஜினி. இளைஞர்களுக்குப் பிடித்தது போல இருக்கவேண்டும் என்பதால் முதல் பாதியில் உடை, ஸ்டைல் எல்லாம் அதற்கேற்றாற்போல இருக்கும்.

    ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் பஞ்ச்களை எழுதும் பொறுப்பையும் அவரே எடுத்துக்கொண்டார். 'போடா, ஆண்டவனே நம்ம பக்கம்தான் இருக்கான்', 'அதிகமா ஆசைப்படற ஆம்பளையும் அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை' என்கிற வசனங்களை ரஜினியே எழுதியிருந்தார்.

    இதில் அசத்தலான ரம்யா கிருஷ்ணன் வில்லத்தனமான நடிப்பும் ரசிகர்கள் இடையே பெறும் வரவேற்பை பெற்றது. அனைத்து பாடல்களும் ரசிகர்களின் நெஞ்சில் இன்றைக்கு வரை நீங்கா இடம் பிடித்துள்ளது.


    படையப்பா படத்தை கண்டுகளிக்காத தமிழ் சினிமா ரசிகர்களை இருந்திருக்க முடியாது என்ற அளவுக்கு தியேட்டர்களில் கூட்டம் கூட்டமாக குடும்பத்தோடு வந்து பார்த்து ரசித்தார்கள். அந்த வகையில் குழந்தைகள், தாய்மார்கள் என அனைவரையும் கவர்ந்த இன்னொரு ரஜினி படம் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    இந்த நிலையில், படையப்பா திரைப்படத்தையும் ரிலீலிஸ் செய்ய அப்படத்தின் தயாரிப்பாளரான தேனப்பன் முடிவு

    செய்துள்ளதாகவும், இதற்காக நடிகர் ரஜினிகாந்த்திடம் ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


    படையப்பா படம் ரீரிலீஸ் ஆகும் என்ற தகவல் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. கில்லி படம் போல அதிக வசூலை பெறும் என்று திரை வட்டாராங்களிடையே பேசப்பட்டு வருகிறது.

    • ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் "அந்நியன்".
    • இந்நிலையில் இந்த திரைப்படம் 4கே தரத்தில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மறு வெளியீடு செய்யப்பட்டது.

    ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் "அந்நியன்". இது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆரம்பத்திலும் பின்னர் பிரெஞ்சு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளிவந்தது. இதுவே பிரெஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரான்சில் திரையிடப்பட்ட முதலாவது இந்தியத் திரைப்படமாகும்.

    ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மூன்று சிறப்பு தோற்றங்களில் நடித்திருந்தார். மேலும், பிரகாஷ் ராஜ், சதா மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    இந்நிலையில் இந்த திரைப்படம் 4கே தரத்தில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மறு வெளியீடு செய்யப்பட்டது. தெலுங்கில் "அபரிசித்துடு" என்ற பெயரில் இந்த திரைப்படம் வெளியானது. இதனை தெலுங்கு ரசிகர்கள் திரையரங்குகளில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்நியன் போன்று வேடமிட்டு திரையரங்கில் ரசிகர் ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×