search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பான்"

    • கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திரவ நைட்ரஜன் பான் சாப்பிட 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • வயிற்றில் உள்ள துளை விரிவடைவதைத் தடுக்க சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுமியின் வயிற்றின் ஒரு பகுதி, சுமார் 4×5 செ.மீ அளவு, அகற்றப்பட்டது.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திரவ நைட்ரஜன் பான் சாப்பிட 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிப்பு பீடா வகையான பான் என்பது வட இந்தியாவில் பிரசித்தி பெற்ற பாரம்பரிய பண்டம் ஆகும். சமீப காலங்களில் தென்னிந்தியாவிலும் இந்த பான் வகைகள் விரும்பி உண்ணப்பட்டு வருகின்றன. ஐஸ் பான் முதல் ஃபயர் பான் வரை பான் வகைகள் உருவாகி இளைஞர்களின் விருப்பத்தை தூண்டியுள்ளது.

     

    இதில் புகையுடன் கூடிய திரவ நைட்ரஜன் பான் வகை உண்ணும்போது திரில் ஆன அனுபவத்தை தருவதால் சிறுவர்கள் அதனை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் அதுவே ஒரு சிறுமிக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது. பெங்களூருவில் 12 வயது சிறுமி திரவ நைட்ரஜன் பான் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருதுவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் வயிற்றில் துளை உருவாகியுள்ளதை கண்டறிந்துள்ளனர்.

    இந்த துளை உருவாகுதலுக்கு பெர்ஃபோரேஷன் பெரிட்டோனிடிஸ் (perforation peritonitis) என்பது மருத்துவப் பெயர் ஆகும். வயிற்றில் உள்ள துளை விரிவடைவதைத் தடுக்க சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுமியின் வயிற்றின் ஒரு பகுதி, சுமார் 4×5 செ.மீ அளவு, அகற்றப்பட்டது. சிகிச்சைக்குப் பின் சிறுமி உடல் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் உணவில் திரவ நைட்ரஜனை பயன்படுத்துவது கடுமையான விளைவுகளைத் ஏற்படுத்தும். திரவ நைட்ரஜனில் ஆவியாகும் இரசாயனமே இதற்கு காரணம் ஆகும். இந்த நீராவிகளை உள்ளிழுப்பது சுவாசிப்பதில் சிரமத்திற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

     

     

    ×