search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாட்டு தொழுவம்"

    • ஏற்கனவே சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
    • மாட்டு உரிமையாளர்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிமம் பெறலாம்.

    சமீபகாலமாகவே சென்னையில் சுற்றித்திரியும் நாய்களால், சிறுவர், சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.. அதனால்தான், நாய்களை வளர்ப்பது குறித்த விதிமுறைகளை, சென்னை மாநகராட்சி வகுத்து வருகிறது. அத்துடன் சில கட்டுப்பாடுகளையும், அபராதங்களையும் அமல்படுத்தி உள்ளது.

    அதுபோலவே, மாடுகள் விஷயத்திலும் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

    இரவு நேரங்களில், சாலையின் நடுவில் படுத்து கிடக்கும் மாடுகளைக்கண்டு, கனரக வாகனங்கள் திடீரென பிரேக் அடிப்பது. பக்கவாட்டில் செல்வது போன்ற காரணங்களாலும் விபத்துகள் நடக்கின்றன. அதேபோல, பள்ளி, கல்லூரிக்கு செல்வோரும், வேலைக்கு செல்வோரும் பரபரப்புடன் செல்லும்போது, கால்நடைகள் சாலைகளை ஆக்கிரமித்தபடி வலம் வருகின்றன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் சில நேரம் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

    ஏற்கனவே சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அதனால்தான், கால்நடைகளை வளர்ப்பவர்களை மாடுகளை உரிய கவனத்துடன் பராமரிக்குமாறு மாநகராட்சி வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னையில் மாட்டு தொழுவங்களுக்கு லைசென்ஸ் கட்டாயம் என்ற புதிய விதி ஜூன் முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னையில் சாலைகளில் மாடுகளும் சுற்றித்திரிவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை மாடுகள் முட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. போதிய இடமும், தொழுவமும் இல்லாமல் வளர்ப்பதால்தான், இப்படி தெருக்களிலும் சாலைகளிலும் சுற்றித்திரிய நேரிடுகிறது. ஆதலால் மாட்டு உரிமையாளர்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிமம் பெறலாம்.

    ×