search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீ கவுரி மாரியம்மன்"

    • கோவில்கள் பல கட்டினான். சீர்திருத்தங்கள் பலவும் செய்தான்.
    • ஊர் முன்னேற்றம் பெற காரணமாயிருந்த மன்னன் வீரபாண்டியன் பெயரே அவ்வூருக்கு வழங்கப்பட்டது.

    கண் நோய் தீர்க்கும் கோவிலாக விளங்கி வருவது வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன்.

    வீரபாண்டி என்ற பெயருக்கும் மாரியம்மன் என்ற பெயருக்கும், பொருத்தமான காரணமும் உண்டு.

    அதாவது மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தவன் வீரபாண்டிய மன்னன்.

    ஒருமுறை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான முல்லை (பெரியாறு) அணைப்பகுதிப் பக்கம் வேட்டைக்கு வந்தான்.

    வேட்டை ஏதும் கிடைக்காத மன்னன் மயங்கி கிரங்கி விழுந்த போது திடீரென இரண்டு கண்களின் பார்வையும் செயலிழந்து விடுகின்றன.

    இவ்விதம் திடீரென பார்வையை இழந்தது தெய்வ குற்றமாகத்தான் இருக்கும் என்று உடன் வந்த மந்திரி ஒருவர் நினைத்தார்.

    மன்னா தங்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க வேண்டும் என்றால் கண்ணீஸ்வரமுடையார் இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.

    மந்திரியின் ஆலோசனைப்படி மன்னனும் இறைவனை வேண்டினான்.

    அவனது கனவில் இறைவன் தோன்றினார்.

    "மகனே உலகைக் காக்கும் உன் அன்னை உமாதேவி அம்சம் பொருந்திய மாரியம்மன், நான் எழுந்தருளியிருக்கும் ஸ்தலத்தின் அருகே அமர்ந்து தவமிருக்கிறாள். அவளை வணங்கினால் அவளது அருள்பார்வை உன்மீது படும். அவளுடன் சேர்ந்து நானும் உனக்கு பார்வை தருகிறேன்" என்று கூறி மறைந்தார்.

    கண்ணீஸ்வரனது அருள் வாக்குப்படியே அம்மனை மன்னனும் வேண்டினான்.

    பார்வையும் கிடைக்கப்பெற்றான்.

    அதன் பிராயசித்தமாக குளங்கள் பல வெட்டினான்.

    கோவில்கள் பல கட்டினான். சீர்திருத்தங்கள் பலவும் செய்தான்.

    ஊர் முன்னேற்றம் பெற காரணமாயிருந்த மன்னன் வீரபாண்டியன் பெயரே அவ்வூருக்கு வழங்கப்பட்டது.

    இவ்வூரில்தான் சுயம்புவாக காட்சி தந்து கொண்டிருக்கிறாள் ஸ்ரீ கவுமாரியம்மன் கண் நோய் கண்டவர்கள், அம்மை நோய் கொண்டவர்கள் வந்து இங்கு வழங்கப்படும் தீர்த்த நீரினை அருந்துகின்றனர்.

    அவ்விதம் அருந்துபவர்களின் கண்நோய் அம்மை நோய்கள் குணமாகிவிடும் என்பது ஐதீகம்.

    ×