என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுடிதார் கும்பல்"

    • திருடர்கள் இருவர் சுடிதார் அணிந்து பெண் வேடத்தில் கொள்ளை.
    • எஸ்ஆர் நகரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு.

    தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள செக் காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வெங்கடேஷ்வர ராவ். தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 18ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஆந்திராவில் உள்ள ஓங்கோ என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில், மறுநாள் காலை பணிப்பெண் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து பணிப்பெண் வெங்கடேஷராவிடம் கூறியதை அடுத்து, அவர் போலீசில் புகார் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். பிறகு, சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது, திருடர்கள் இருவர் சுடிதார் அணிந்துக் கொண்டு பெண் வேடத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    அவர்களின் தனித்துவமான உடையின் காரணமாக "சுடிதார் கும்பல்" என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அவர்கள் எஸ்ஆர் நகரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில், மே 18 ஆம் தேதி அதிகாலையில் சுடிதார் மற்றும் முகமூடி அணிந்த இரண்டு ஆசாமிகள் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்தது தெரியவந்தது.

    இதில், 12 சவரன் தங்கம், ரூ. 1 லட்சம் ரொக்கம், மடிக்கணினி உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×