என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மில்க் ஷேக்"

    • மில்க் ஷேக் கசப்பாக இருந்ததால் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சோதித்துள்ளனர்.
    • அப்போது அதில் அழுகிய நிலையில் கிடந்த பல்லி இருந்துள்ளது.

    சென்னை முகப்பேரில் பிரபல நிறுவனத்தின் மில்க் ஷேக் பாக்கெட்டில் அழுகிய நிலையில் கிடந்த பல்லி இருந்துள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முகப்பேரில் வசித்து வரும் யுவராஜ் - பூங்கோதை தம்பதிக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் இவரது மகளுக்காக யுவராஜ் மில்க் ஷேக் வாங்கி வந்துள்ளார்.

    அந்த மில்க் ஷேக் கசப்பாக இருந்ததால் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சோதித்துள்ளனர். அப்போது அதில் அழுகிய நிலையில் கிடந்த பல்லி இருந்துள்ளதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனையடுத்து மில்க் ஷேக் வாங்கிய சூப்பர் மார்க்கெட்டில் சென்று யுவராஜ் முறையிட்டுள்ளார். ஆனால் அவர்கள் முறையாக பதில் அளிக்கவிலை.

    பின்னர் சிறிது நேரத்தில் மில்க் ஷேக்கை குடித்த கல்லூரி மாணவிக்கும் அவருடைய தம்பிக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மில்க் ஷேக்கை விற்பனை செய்த சூப்பர் மார்க்கெட், தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்நிலையில், மில்க் ஷேக் பாக்கெட்டின் உள்ளே பல்லி அழுகிய நிலையில் கிடந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×