search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் வீடியோ"

    • முதல் பென் டிரைவ் ஏப்ரல் 21-ந்தேதி வெளியிடப்பட்டது. பிரஜ்வல் ஏப்ரல் 27-ந்தேதி வெளிநாட்டிற்கு ஓடினார்.
    • அவர்கள் ஏழு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். வழக்குப்பதிவு செய்து ஏன் தடுத்து நிறுத்தவில்லை?

    முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான பாலியல் வீடியோ வெளியாகி கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கர்நாடகா மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

    வீடியோ வெளியானதும் தூதரக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு ஓடிவிட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்க எடுக்க வேண்டும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுந்தியிருந்தார்.

    தற்போது 2-வது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் "நாட்டை விட்டு வெளியேறவும், குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவும் அரசு வழங்கிய சலுகையை பிரஜ்வல் ரேவண்ணா துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்து, பொதுமக்களின் நலன் கருதி அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தயாவுக்கு கொண்டு வர ஒத்துழைக்க தயராக இருக்கிறோம் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-

    தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு ஒத்துழைக்க தயாராக உள்ளது.

    இவ்வாறு பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    கர்நாடகா மாநில அரசு பிரஜ்வல் மீது மத்திய அரசு ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை. அவரை தடுத்து நிறுத்தவில்லை என கேள்வி எழுப்பி வருகிறது.

    இதற்கு பதில் அளித்த பிரகலாத் ஜோஷி, மாநில அரசு இந்த விசயத்தில் அரசியல் செய்யவும், மத்திய அரசு மீது பழி சுமத்தவும் முயற்சிக்கிறது என்றார்.

    மேலும், முதல் பென் டிரைவ் ஏப்ரல் 21-ந்தேதி வெளியிடப்பட்டது. பிரஜ்வல் ஏப்ரல் 27-ந்தேதி வெளிநாட்டிற்கு ஓடினார். அவர்கள் ஏழு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். வழக்குப்பதிவு செய்து ஏன் தடுத்து நிறுத்தவில்லை? என்றார்.

    ×