என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மஞ்சுமல் பாய்ஸ்"
- கேரளாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த போதை விருந்தில் பங்கேற்ற விவகாரத்தில் ஸ்ரீநாத் பாசி சிக்கினார்.
- ஸ்ரீநாத் பாசி கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது பஹீம் என்பவர் படுகாயமடைந்தார்.
பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர் சமீபத்தில் நடித்து வெளியான 'மஞ்சுமல் பாய்ஸ்' திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் மிகவும் பிரபலமானார்.
சமீபத்தில் கேரளாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த போதை விருந்தில் பங்கேற்ற விவகாரத்தில் சிக்கினார். அது தொடர்பான வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், மற்றொரு வழக்கிலும் சிக்கினார்.
எர்ணாகுளத்தில் காரில் சென்றபோது, அவரது கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது பஹீம் என்பவர் படுகாயமடைந்தார். மேலும் நடிகர் ஸ்ரீநாத் பாசி சம்பவ இடத்தில் தனது காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார்.
இதுகுறித்து எர்ணாகுளம் மத்திய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அந்த வழக்கில் நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டார். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் நடிகர் ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமத்தை எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து அலுவலர் தற்காலிக ரத்து (சஸ்பெண்டு) செய்தார். அவரது ஓட்டுநர் உரிமம் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மலையாளத்தில் உருவான மஞ்சுமல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகி உலகளவில் 241 கோடி ரூபாய் வசூலித்தது
- மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மலையாளத்தில் உருவான மஞ்சுமல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகி உலகளவில் 241 கோடி ரூபாய் வசூலித்து பெறும் வெற்றியை பெற்றது. மலையாள திரையுலகில் மிகப்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் முதல் இடத்தில் இருக்கிறது.
சமீபத்தில், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்காக தான் 7 கோடியை முதலீடு செய்திருந்ததாகவும், ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தற்போது வரை தனக்கு லாபத்தில் ஒரு ரூபாய் கூட பணம் அளிக்கவில்லை எனவும், முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டது. இந்நிலையில், மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அதன்படி, இத்தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனியை கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வரவழைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மற்ற தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், பாபு ஷாஹிர் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கிடைத்த பணத்தை கருப்பு பணமாக மறைத்து வைத்துள்ளார்களா என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் இசையமைப்பாளர் இளையராஜா அவரது கண்மணி அன்போடு காதலன் பாடலை அனுமதியின்றி உபயோகித்ததாக வழக்கு தொடர்ந்தார், தற்பொழுது இந்த பிரச்சனையும் ஓங்கி எழுந்துள்ளது. இந்த வழக்கிற்கு தயாரிப்பாளரான ஷான் ஆண்டனியிடம் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் இளையராஜா பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் ஆவார்.
- இளையராஜா அனுப்பியதாக கூறிய நோட்டீஸ் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.
மலையாளத்தில் அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ். நடிகர் கமல் நடித்து 1990-களில் வெளியான குணா படத்தின் கண்மணி அன்போடு என்ற பாடல் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்த பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக கூறி மஞ்சுமல் பாய்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், "பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் இளையராஜா பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் ஆவார். அதனால் அவரிடம் முறையாக அனுமதி பெற்று பாடலை பயன்படுத்தியிருக்க வேண்டும். அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும். பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாக கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளர் சான் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார். அதில்,
கண்மணி அன்போடு காதலன் பாடலுக்கு உரிய அனுமதி பெற்று தான் பயன்படுத்தி உள்ளோம். இளையராஜா அனுப்பியதாக கூறிய நோட்டீஸ் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்