search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாருதி ஸ்விஃப்ட்"

    • முதன் முதலில் 2005-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் 2013-ம் ஆண்டு 10 லட்சம் கார்கள் விற்பனையானது.
    • தற்போது 4-வது தலைமுறையில் காலடி எடுத்து வைத்துள்ள ஸ்விஃப்ட் அதன் தொடக்கத்தில் 30 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

    மாருதி சுசுகி இந்தியாவில் விற்பனை செய்து கொண்டிருக்கும் மிக சிறந்த கார் மாடல்களில் ஒன்று ஸ்விஃப்ட். இந்த மாடல் மிகவும் பிரபலமானது மற்றும் பெயர் பெற்றதும் கூட.

    ஸ்விஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டத்தில் இருந்து 30 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளதன் மூலம் மாருதி சுசுகி நிறுவனம் மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.

    முதன் முதலில் 2005-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் 2013-ம் ஆண்டு 10 லட்சம் கார்கள் விற்பனையானது. பின்னர் இந்த எண்ணிக்கை 2018-ல் இரட்டிப்பாக்கியது. தற்போது 4-வது தலைமுறையில் காலடி எடுத்து வைத்துள்ள ஸ்விஃப்ட் அதன் தொடக்கத்தில் 30 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் மாடலின் ஆரம்ப விலையாக ரூ.6.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஸ்விஃப்ட் சிறந்த எரிபொருள் திறன் மற்றும் அதிக உயரிய வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் முற்றிலும் புதிய எஞ்சினைப் பெற்றுள்ளது.


    ஒவ்வொரு புதிய தலைமுறை வெர்ஷனிலும், ஸ்விஃப்ட் அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்கி அதன் விற்பனையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது. 'Swift DNA' தற்கால பாணி மற்றும் வாடிக்கையாளர்களைக் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.

    "இந்த மகத்தான சாதனைக்காக நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாடு முழுவதும் உள்ள அனைத்து ஸ்விஃப்ட் உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்," என்று மாருதி சுசுகி இந்தியாவின் விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்தார்.

    • கர்நாடக மாநிலம் உடுப்பியில் இரு குழுக்களிடையே நடந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • வீடியோவைப் பார்த்த நெட்டிஸங்கள் சினிமாவை விஞ்சும் வகையில் இந்த மோதல் உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் உடுப்பியில் இரு குழுக்களிடையே நடந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பணத் தகராறு காரணமாக உடுப்பி-மணிப்பால் நெடுஞ்சாலையில் 2 குழுக்களைச் சேர்ந்த 6 பேர் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கியும், குழுக்கள் ஆளுக்கொரு மாருதி ஸ்விஃப்ட் கார்களைக் கொண்டு ஒன்றை ஒன்று மோதியும் சண்டையிட்டுக் கொண்டது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

    கடந்த மே 18 ஆம் தேதி நடந்த இந்த மோதலை சாலையின் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் வசிப்பவர் மாடியில் இருந்து எடுத்த மொபைல் இந்த வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

     

    இந்நிலையில் மோதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிந்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரக்ளின் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிஸங்கள் சினிமாவை விஞ்சும் வகையில் இந்த மோதல் உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

     

    ×