என் மலர்
நீங்கள் தேடியது "குஜராத் பேரிடர்"
- ராஜ்கோட் மாநகராட்சி இத்தகைய விளையாட்டு வளாகத்தை அனுமதித்திருக்கக் கூடாது.
- தீ விபத்து குறித்து நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 33 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
விசாரணையின்போது, தீ விபத்து ஏற்பட்ட டிஆர்பி விளையாட்டு வளாகம் தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழை பெறவில்லை என வழக்கறிஞர் அமீத் பாஞ்சல் தெரிவித்துள்ளார்.
மேலும், "ராஜ்கோட் மாநகராட்சி இத்தகைய விளையாட்டு வளாகத்தை அனுமதித்திருக்கக் கூடாது
அப்பாவி குழந்தைகள் உள்ளிட்ட உயிர் பலியால் அவர்களது குடும்பங்களை துயரில் ஆழ்த்திய இந்த தீ விபத்து அடிப்படையில் மனிதர்களால் ஏற்பட்ட பேரிடர்.
தீ விபத்து குறித்து நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ப்ரஜேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், வழக்கின் நகலை ராஜ்கோட் மாநகராட்சி, குஜராத் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞருக்கும் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.