என் மலர்
நீங்கள் தேடியது "மனோஜ்"
- மனோஜ் உடலுக்கு பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜின் மகன் வினோத் கொள்ளி வைத்தார்.
- தந்தைக்கு கொள்ளிக்குடம் தூக்கி மகள் அக்ஷிதா இறுதிச்சடங்கு செய்தார்.
தமிழ் திரை உலகில் இயக்குநர் இமயம் என போற்றப்பட்டு வருபவர் பாரதி ராஜா. இவரது மகன் மனோஜ் (வயது 48) நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். இவரது மரணம் திரை உலகினரை மட்டும் இன்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மனோஜ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. மனோஜ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மனோஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து இன்று மாலை அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மனோஜ் உடலுக்கு அவரது 2 மகள்களும் கொள்ளிக்குடம் தூக்கி இறுதிச்சடங்கு செய்தனர். மனோஜ் உடலுக்கு பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜின் மகன் வினோத் கொள்ளி வைத்தார்.
- எந்திரன் திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கினார்.
- எந்திரன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் மனோஜ் பணியாற்றி இருப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. எந்திரன் படத்தில் இயக்குநர் ஷங்கருக்கு உதவி இயக்குநராக மனோஜ் பணியாற்றி இருக்கிறார்.

அதன்படி எந்திரன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்-க்கு மனோஜ் டூப்பாக நடித்துள்ளார். நேற்று (மார்ச் 25) மாலை மனோஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவர் எந்திரன் படத்தில் பணியாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் எந்திரன். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.
- மறைந்த மனோஜ் உடலுக்கு நடிகர்கள், ரசிகர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- இயக்குனர் பாரதிராஜாவுக்கு விஜய் ஆறுதல் கூறினார்.
தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குனரான பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து சேத்துப்பட்டில் வைக்கப்பட்டு இருந்த மனோஜ் உடலுக்கு நடிகர்கள், ரசிகர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இதையடுத்து, சேத்துப்பட்டில் இருந்து நீலாங்கரையில் உள்ள மனோஜ் இல்லத்திற்கு அவரது உடலானது கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை 3 மணி வரை இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் மனோஜ் உடல், பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், உயிரிழந்த மனோஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின், இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினார்.
- மரணம் அடைந்த மனோஜ் உடல் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
- பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர் குடும்பத்துடன் சென்னை சேத்துப்பட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் மனோஜுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
நேற்று இரவு மனோஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48. மனோஜ் மறைவு திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து மனோஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமைலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
மேலும், இயக்குனர்கள் தியாகராஜன், பேரரசு, நடிகர்கள் பார்த்திபன், சூர்யா, ரோபோ சங்கர், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலரும் கண்ணீர் மல்க மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மரணம் அடைந்த மனோஜ் உடல் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று மாலை 3 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் மனோஜ் உடல், பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
- மனோஜுக்கு திரைத்துறை சார்ந்தவர்கள் அவர்களது இரங்கலை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
- பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ்.
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமானார்.
இவருக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோஜுக்கு திரைத்துறை சார்ந்தவர்கள் அவர்களது இரங்கலை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ்.
இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறுகையில், ``மனோஜின் திடீர் மரணச் செய்தி அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.''
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நடிகர் மனோஜ் மறைவின் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- இளையராஜா அவரது இரங்கலை வீடியோ வாயிலாக இணையத்தில் பதிவிட்டார்.
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பு ஏற்பட்டு இன்று மாலை காலமானார்.
இவரது மறைவின் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் மனோஜின் மறைவுக்கு இளையராஜா அவரது இரங்கலை வீடியோ வாயிலாக இணையத்தில் பதிவிட்டார்.
அந்த வீடியோவில் அவர் குறிப்பிடுகையில், " எனது நண்பன் பாரதிராஜாவின் மகன் மனோஜ்குமார் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ந்து போனேன்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை, இப்படியொரு சோகம் பாரதிராஜாவுக்கு நிகழ்ந்திருக்க கூடாது.
மனோஜ் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
- குடும்பத்தை சேர்ந்த 14 வயது சிறுவனை தாக்கியதாக மனோஜ் மீது புகார் கூறப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள காயம்குளம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது45). பாரதிய ஜனதா கட்சி பிரமுகரான இவர் கப்பில் கிழக்கு பகுதி பூத் தலைவராக இருந்து வந்தார். இவரது வீட்டின் அருகே தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. அந்த குடும்பத்தை சேர்ந்த 14 வயது சிறுவனை தாக்கியதாக மனோஜ் மீது புகார் கூறப்பட்டது.
அதன்பேரில் காயம்குளம் போலீசார் வழக்கு பதிந்து அவரை கடந்த 22-ந்தேதி கைது செய்தனர். பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மனோஜ் மறுநாள் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது கொலைமுயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இருந்தபோதிலும் அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
அதன்பிறகு வீட்டில் இருந்துவந்த மனோஜ் மீது சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இணையதளத்தில் பலர் சைபர் தாக்குதல் நடத்தினர். மேலும் அவர் மீது ஜாமீனில் வெளிவராத முடியாக பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியது.
இந்நிலையில் தன்னுடைய வீட்டில் இருந்த மனோஜ் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். தனக்கு எதிரான சைபர் தாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் மனோஜ் வேதனையில் இருந்துவந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே தன் மீதான சைபர் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட மனவேதனையிலேயே அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.