search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஷ்ரூம்"

    • சிக்கன் முக்கால் பாகம் வெந்த பிறகு வாணலியை இறக்கிவிடவும்.
    • சிக்கன் மஷ்ரூமை சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1 கிலோ

    மஷ்ரூம் - 1/2 கிலோ

    சோள மாவு - 100 கிராம்

    மிளகு தூள் - காரத்திற்கு ஏற்ப

    உப்பு - தேவையான அளவு

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    வெண்ணெய் - தேவையான அளவு

    வெங்காயம் - 2

    பூண்டு - 2 முழுஅளவு

    பிரெஷ் கிரீம் - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் சிக்கன், சோளமாவு, மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து அவற்றை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் வெங்காயம், பூண்டு இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மஷ்ரூம்களை உங்களுக்கு தேவைப்படும் வடிவில் கட் செய்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் ஊற வைத்துள்ள சிக்கன் கலவையை போட்டு நன்கு வதக்கவும். சிக்கன் முக்கால் பாகம் வெந்த பிறகு வாணலியை இறக்கிவிடவும்.

    பின்னர் ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு கட் செய்து வைத்துள்ள மஷ்ரூம்களை சேர்க்கவும், அதனுடன் சிறிதாக நறுக்கி வைத்துள்ள பூண்டு அதற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

    அதனை தொடர்ந்து ஏற்கனவே பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒரு கலவையாக வரும் நேரத்தில் பிரெஷ் கிரீமை அதனுடன் சேர்த்து ஒரு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும். பின்னர் கொத்தமல்லி இலைகளை சேர்த்து பரிமாறவும்.

    சிக்கன் மஷ்ரூம் கிரேவி சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    ×