என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீர்த்தீஸ்வரன்"

    • பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிக்கிறார்.
    • இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்

    லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிக்கிறார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

    • தயாரிப்பு நிறுவனம் விரைவில் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஒரே படத்தில் இருவரும் இணைவதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஜெயம் ரவியின் "கோமாளி" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் "லவ் டுடே" படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெற்றன. பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவனின் "எல்ஐசி" மற்றும் அஸ்வத் மாரிமுத்துவின் "டிராகன்" ஆகிய இரண்டு படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவியாளராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்க உள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

    "எல்ஐசி", "டிராகன்" படங்கள் முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தயாரிப்பு நிறுவனம் விரைவில் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


    கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியான படம் பிரேமலு. இந்த படத்தில் நஸ்லேன், 'சச்சின்' என்ற கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மமிதா பைஜூ. அதில் இவரது பெயர், ரீனு. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றது. இதையடுத்து மமிதா பைஜூக்கு படங்கள் வரிசை கட்டி நின்றன. அந்தவகையில் மமிதா பைஜூ முதன் முதலில் நடித்த தமிழ் படம் 'ரெபல்'. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    ஒரு முனையில் பிரதீப் ரங்கநாதன் தமிழ் திரையுலகில் சூப்பர் ஹிட் படம் கொடுத்தவர் என்ற நிலையில் மற்றொரு முனையில் மமிதா பைஜூ மலையாளத்தில் சூப்பர் ஹிட் படம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஒரே படத்தில் இருவரும் இணைவதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×