என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் சினிமா சினிமா செய்தி"

    • துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கருடன்
    • சமுத்திரக்கனி, மைம் கோபி, ரேவதி ஷர்மா, ரோஷினி ஹரிபிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கருடன், இப்படம் நாளை {மே30} வெளியாகவுள்ளது.

    சமுத்திரக்கனி, மைம் கோபி, ரேவதி ஷர்மா, ரோஷினி ஹரிபிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெற்றி மாறன் கதை எழுதியுள்ளார். படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. இந்நிலையில் படத்தின் மேகிங் வீடியோவை தற்பொழுது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    இதில் படப்பிடிப்பு பணிகள், சூரி-யின் ஆக்ஷன் பயிற்சிகள், சண்டை காட்சிகள் எவ்வாறு எடுக்கப்பட்டன என ஒரு முன்னோட்டமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. விடுதலை திரைப்படம் போல் சூரிக்கு அடுத்த வெற்றி தரும் திரைப்படமாக கருடன்  அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×