என் மலர்
நீங்கள் தேடியது "கார் உற்பத்தி"
- இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக கார் விற்பனை அதிக அளவில் நடந்து வந்த நிலையில் இந்த மே மாதம் கார் விற்பனை மந்த நிலையை எட்டியுள்ளது.
- ஒரு லட்சம் யூனிட்கள் கூட தற்போது விற்பனை செய்யப்படாமல் தேங்கியிருப்பது வழக்கத்துக்கு மாறாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக கார் விற்பனை அதிக அளவில் நடந்து வந்த நிலையில் இந்த மே மாதம் கார் விற்பனை மந்த நிலையை எட்டியுள்ளது. இதனால் கடந்த காலங்களில் அதிக லாபம் ஈட்டி வந்த கார் டீலர்கள், தற்போது சுமார் 4.5 லட்சம் யூனிட் அளவிலான உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் விற்பனை ஆகாமல் உற்பத்தியாளர்களிடமே தேங்கியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஒரு மாதத்துக்கு 3.5 லட்சம் யூனிட் கார்கள் விற்பனையாகும் அளவிற்கு கார் விற்பனை சந்தை வளர்ந்துள்ள போதிலும் ஒரு லட்சம் யூனிட்கள் கூட தற்போது விற்பனை செய்யப்படாமல் தேங்கியிருப்பது வழக்கத்துக்கு மாறாக பார்க்கப்படுகிறது.

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் விங்கேஷ் குலாட்டி இதுகுறித்து பேசுகையில், உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தாயாராக இருக்கும் கார்கள் 4 லட்சம் யூனிட் அளவிற்கு விற்பனைக்கு செல்வது ஆரோக்கியமான சந்தையை உருவாக்கும்.

ஆனால் தற்போது 1 லட்சம் யூனிட் அளவு கூட விற்பானையாகாமல் தேங்கி நிற்கிறது. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட கார் யூனிட்களை கூடுதலாக பல மாதங்களாக இருப்பில் வைத்திருக்கும் செலவு அதிகரிப்பது கார் வாங்குபவர்களுக்கு டீலர்களுக்கும் நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.
இந்த அசாதாரண நிலையை சரி செய்ய உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை குறைத்துக்கொள்வதே தீர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
- கார் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
- இதன்மூலம் 5 ஆண்டுகளில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமையும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், பனப்பாக்கத்தில் அமைய உள்ள டாடா நிறுவனத்தின் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
முதல் கட்டமாக ₹914 கோடி மதிப்பில் தொழிற்சாலையை அமைக்கிறது டாடா நிறுவனம்.
இதன்மூலம் 5 ஆண்டுகளில் ₹9,000 கோடி முதலீடு மற்றும் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.