என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிரியூவ்"
- "தென்னிந்தியாவில் இதுபோன்ற படங்களுக்கு அதிக ரசிகர்கள் இல்லை என்பதால் அவற்றை தமிழுக்கு கொண்டு வர அதிக காலம் எடுக்கும்"
- "ஹீரோவுக்காகவே படங்கள் ஓடும் என்ற நிலை மாறி படத்தின் வெற்றிக்கு பெண்களும் முக்கிய பங்கு வகிக்கும் காலம் வந்துவிட்டது"
சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராசி கண்ணா ஆகியோர் நடித்த ஹாரர் படமான 'அரண்மனை 4' திரைப்படம் கடந்த மே 3 ஆம் தேதி வெளியாகி கமர்ஷியலாக நல்ல வரவேற்பைப் பெற்று 100 கோடி வரை வசூலித்துள்ளது.
இந்த படத்தை சுந்தர் சி மற்றும் அவரது மனைவி குஷ்பு -வின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்திருந்தது. அரண்மனை 4 திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு இன்று (மே 31) தியேட்டர்களில் ரிலீசானது. இந்நிலையில் ரிலீஸ் ஆங்கில செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த குஷ்பு, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஹிந்தியில் வெளியான,பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை முக்கிய கதைகளமாகக் கொண்ட 'டார்லிங்ஸ்', 'பதாய் ஹோ', 'கிரியூவ்' போன்ற படங்களை தமிழில் தயாரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் இதுபோன்ற படங்களுக்கு அதிக ரசிகர்கள் இல்லை என்பதால் அவற்றை தமிழுக்கு கொண்டு வர அதிக காலம் எடுக்கும் என்று தெரிவித்த அவர், பெண்களை பிரதானமாக கொண்டு எடுக்கப்படும் படங்களைத் தாண்டி கமர்ஷியலான படங்களையும் தயாரிக்க விரும்புவதாக கூறினார்.
ஹீரோவுக்காகவே படங்கள் ஓடும் என்ற நிலை மாறி படத்தின் வெற்றிக்கு பெண்களும் முக்கிய பங்கு வகிக்கும் காலம் வந்துவிட்டது. படத்திற்கு கதையே கதாநாயகன் என்ற நிலைக்கு நாம் உயர்ந்துள்ளோம் என்று தெரிவித்தார்.
ஆலியா பட் நடிப்பில் ஹிந்தியில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான 'டார்லிங்ஸ்' திரைப்படம் பெண்கள் மீது நிகழும் குடும்ப வன்முறையைப் பற்றி பேசியிருந்தது. ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'பதாய் ஹோ', கதாநாயகனின் தாய் கருவுற்றதால் அந்த குடும்பம் சந்திக்கும் சிக்கல்களை பேசிய வித்தியாசமான படமாக அமைந்தது. பதாய் ஹோ படம் தமிழில் ஆர்.ஜே பாலாஜி, சத்யராஜ் நடிப்பில் வீட்ல விசேஷம் என்ற பெயரில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது.
மேலும் கரீனா கபூர், தபு, கீர்த்தி சனோன் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கிரியூவ் (Crew) திரைப்படம் விமானப் பணிப்பெண்களின் இன்னல்களை பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்