என் மலர்
நீங்கள் தேடியது "மலைகா அரோரா"
- அர்ஜூன் கபூர் மேரி பட்னி கா படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார்.
- இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியானது.
பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் மற்றும் நடிகை மலைகா அரோரா காதிலத்து வந்தனர். இருவரும் ஜோடியாக வலம்வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாவது வாடிக்கையான ஒன்று தான். இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், அர்ஜூன் கபூர் மற்றும் மலைகா அரோரா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது இருவரும் பிரிவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
அர்ஜூன் கபூர் தற்போது மேரி பட்னி கா படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அர்ஜூன் கபூருடன் ரகுல் பிரீத் சிங் மற்றும் பூமி பெட்னேகர் நடிக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.
- தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.
பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா, மும்பையின் பந்த்ராவில் உள்ள வீட்டின் மொட்டையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக இரண்டு போலீசார் சென்றுள்ளனர். இதுவரை தற்கொலை தொடர்பான கடிதம் ஏதும் கண்டெடுக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
அனில் அரோரா தற்கொலை செய்து கொண்டபோது நடிகை மலைகா அரோரா வீடடில் இல்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மலைகா குடும்பத்தினர் இரங்கல் தெரிவிக்க அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
மலைகா அரோராவிற்கு 11 வயது இருக்கும்போது அவரது பெற்றோர் தனியாக பிரிந்தனர். அவரும், அவருடைய தங்கை அம்ரிதா ராவ் (அப்போது 6 வயது) அவர்களுடைய தாயாரால் வளர்க்கப்பட்டனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- அனில் அரோரா மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- அனில் அரோரா தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மகள்களிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா, மும்பையின் பந்த்ராவில் உள்ள வீட்டின் மொட்டையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், அனில் அரோரா தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மகள்களிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
'நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன், சோர்வாக இருக்கிறேன் என்று அனில் அரோரா தனது மகள்களான நடிகைகள் மலைகா அரோரா மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோரை தொலைபேசியில் அழைத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்