search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்ஜாமின் மனு தள்ளுபடி"

    • ஆள் கடத்தல் வழக்கில் பவானி ரேவண்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு.
    • கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

    பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி அவற்றை வீடியோ பதிவு செய்து மிரட்டிய வழக்கில் கர்நாடகாவின் ஹசன் தொகுதி ஜேடிஎஸ் கட்சி எம்.பி-பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது கர்நாடகா போலீஸார் கடந்த மாதம் 27ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு அம்மாநில சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் வெளிவந்ததுமே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார். அவரை கைது செய்ய போலீஸார் புளூகார்னர் நோட்டீஸ் பிறப்பித்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

    பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது போலீஸில் புகார் அளித்த மைசூரு, கே.ஆர்.நகரை சேர்ந்த பெண் கடத்தப்பட்டார். இந்த விவகாரத்தில் எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு, 10 நாள் சிறைவாசத்துக்குப் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில், பெண் கடத்தல் வழக்கில், எச்.டி. ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    கடத்தல் வழக்கில் பவானி ரேவண்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

    பிரஜ்வால் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தயாரான பவானி ரேவண்ணாவும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ×