என் மலர்
நீங்கள் தேடியது "ஹிண்டன்பெர்க் அறிக்கை"
- கடந்த 2023 ஜனவரி மாதம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியாகி அந்நிறுவனத்துக்கு சறுக்கலை ஏற்படுத்தியது.
- வர்த்தகத்தில் அதானியின் பங்குகளின் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (மே 31) 14 சதவீதம் வரை அதிகரித்துள்ளது
இந்தியாவின் பெரும் பணக்காரர்களான கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரின் நிறுவனங்கள் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. இதற்கிடையே பணக்காரர்கள் பட்டியலில் இருவரில் யார் முந்துகிறார்கள் என்ற போட்டி ஆரம்பம் முதலே நிலவி வருகிறது.

அந்த வகையில் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கவுதம் அதானி மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு உலக பொருளாதாரம் சரிவில் இருந்த சமயத்தில் அதானியின் நிறுவனம் அதிக லாபத்தை சேர்த்துக் குவித்ததால் அவர் ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.
ஆனால் கடந்த 2023 ஜனவரி மாதம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியாகி அந்நிறுவனத்துக்கு சறுக்கலை ஏற்படுத்தியது. இந்திய அரசியலிலும் ஹிண்டன்பெர்க் அறிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் அதானி குழுமத்தின் விமான சேவை வர்த்தகம் குறிப்பிடத்தக்க வகையில் லாபம் ஈட்டியுள்ளது.

இதன்காரணமாக வர்த்தகத்தில் அதானியின் பங்குகளின் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (மே 31) 14 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால் ப்ளூம்பெர்க் கறிக்கையின்படி, உலக பணக்காரர்கள் பட்டியலில் 12 ஆவது இடத்துக்கு அம்பானியை பின்னுக்குத் தள்ளி அதானி 11 ஆவது இடத்தைப் பிடித்துள்ளள்ளார். தற்போதைய நிலவரப்படி முறையே கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 111 பில்லியன் டாலராகவும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 109 பில்லியன் டாலராகவும் உள்ளது.

- ஜெய்ப்பூரில் நடந்த 51வது ஜெம் அண்ட் ஜூவல்லரி விருது விழாவில் அதானி பேசியுள்ளார்.
- அமெரிக்காவிடமிருந்து வந்த பல குற்றச்சாட்டுகளை உங்களில் பெரும்பாலோர் படித்திருப்பீர்கள்.
சூரிய மின்சக்தி ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அரசியல் ரீதியாகவும் புயலைக் கிளப்பி வருகிறது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த 51வது ஜெம் அண்ட்ஜூவல்லரி விருது விழாவில் அதானி பேசியுள்ளார். இந்த விவகாரம் குறித்து மேடையில் பேசிய அவர், இரண்டு வாரங்களுக்கு முன்னர், அதானி க்ரீன் எனர்ஜியின் நடைமுறைகள் குறித்து அமெரிக்காவிடமிருந்து வந்த பல குற்றச்சாட்டுகளை உங்களில் பெரும்பாலோர் படித்திருப்பீர்கள்.

இதுபோன்ற சவால்களை நாம் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு தாக்குதலும் நம்மை வலிமையாக்குகிறது, மேலும் ஒவ்வொரு தடையும் மிகவும் உறுதியான அதானி குழுமத்திற்கு ஒரு படியாக மாறும். அதானி குழுமத்தின் வெற்றிகள் இருந்தபோதிலும், அது எதிர்கொண்ட சவால்கள் இன்னும் பெரியவை, இந்தச் சவால்கள் நம்மை உடைக்கவில்லை.
மாறாக, அவை நம்மைக் கடினமாக்கியுள்ளன, மேலும் ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும், நாம் மீண்டும் எழுவோம், முன்பை விட வலிமையாக, மேலும் வலிமையுடன் எழுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை நமக்கு இவை அளித்துள்ளன என்று தெரிவித்தார். மேலும் 2023 இல் வெளிவந்த ஹிண்டன்பெர்க் அறிக்கையையும் சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.