search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீயோல்"

    • வடகொரியாவின் இந்த செயல் மனிதாபிமானமற்றது.
    • இந்த செயலை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியது.

    கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை மேற்கொள்ளும்போது, இவ்வாறு ஏவுகணைகளை செலுத்து தென்கொரியாவை எச்சரிக்கை விடுப்பது வழக்கம்.

    அந்த வகையில், கடந்த சில நாட்களாக ராட்சத பலூன்கள் முழுக்க குப்பைகளை கட்டி அவற்றை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்தது. இருநாட்டு எல்லையில் அமைந்துள்ள தென்கொரிய பகுதிகளுக்குள் ஏராளமான பலூன்கள் இவ்வாறு பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்த பலூன்களில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில், ஷூ பகுதிகள், சாணம், சிகரெட் துண்டுகள் இடம்பெற்று இருந்தன. வடகொரியாவின் இந்த செயல் மனிதாபிமானமற்றது என்றும் மிகவும் தரம்தாழ்ந்த ஒன்று என தென்கொரியா தெரிவித்தது. மேலும், வடகொரியாவின் இந்த செயலை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்தியது.

    இந்த நிலையில், வடகொரியா துணை பாதுகாப்பு துறை அமைச்சர் கிம் காங் II, "எல்லைப்பகுதியில் ராட்சத பலூன்களில் குப்பை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துகிறோம். குப்பைகளை சுத்தம் செய்ய எவ்வளவு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது, இப்படி குப்பைகளை கொட்டினால் எப்படி இருக்கும் என்பதை தென் கொரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்," தெரிவித்தார்.

    தென் கொரியா சார்பில் நீண்ட காலமாக பலூன்கள் அனுப்பப்பட்டு வருவதற்காகவே இவ்வாறு பலூன்கள் அனுப்பப்பட்டன என்று கிம் காங் II தெரிவித்தார்.  

    ×