என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலெக்ஸ் டி மினார்"

    • ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஆஸ்திரேலிய வீரர் டி மினார் காலிறுதிக்கு முன்னேறினார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், பிரிட்டனின் ஜேக்கப் பெர்ன்லி உடன் மோதினார்.

    இதில் டி மினார் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் காலிறுதியில் டி மினார், கார்லோஸ் அல்காரசை சந்திக்கிறார்.

    • ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், அர்ஜெண்டினாவின் தாமஸ் மார்ட்டின் உடன் மோதினார்.

    இதில் டி மினார் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 6-2, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஈதன் குயினை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய டி மினார் 6-2, 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் மெத்வதேவ் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    • 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினார் மற்றும் டேனியல் மெட்வதேவ் மோதினர்.
    • முதல் செட்டை வென்ற மெட்வதேவ் அடுத்த 3 செட்டை எளிதாக கோட்டைவிட்டார்.

    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் மற்றும் டேனியல் மெட்வதேவ் மோதினர்.

    முதல் செட்டை வென்ற மெட்வதேவ் அடுத்த 3 செட்டை எளிதாக கோட்டைவிட்டார். இதனால் 4-6, 6-2, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரிடம் மெட்வதேவ் தோல்வியைத் தழுவினார்.

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஆஸ்திரேலிய வீரர் டி மினார் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    வியன்னா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார், இத்தாலியின் பிளாவியோ கோபோலி உடன் மோதினார்.

    இதில் டி மினார் 7-6 (7-2) என முதல் செட்டை வென்றார். 2வது செட்டில் 3-1 என முன்னிலை பெற்றிருந்தபோது கோபோலி விலகிக் கொண்டார். இதனால் டி மினார் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் ஆஸ்திரேலிய வீரர் டி மினார் அரையிறுதிச் சுற்றில் வெற்றி பெற்றார்.

    ரோட்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், இத்தாலி வீரர் மேட்டி பெல்லூசி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய டி மினார் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.


    ×