என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்பா"

    • 2012 ஆம் ஆண்டு `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.
    • ஜனவரி 24 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டில் அவரது தோழி மற்றும் காதலியான நடாஷா தலாலை திருமணம் செய்துக்கொண்டார்.

    இந்தி திரையுலகில் அதிகமான சம்பளம் வாங்க கூடிய நடிகர்களுள் வருண் தவானும் ஒருவர். 2012 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆண்டு வரை தொடர் வெற்றி படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் பதிந்தார். இவர் பிரபல இந்தி இயக்குனர் டேவிட் தவானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    2010 ஆம் ஆண்டு இயக்குனர் கரன் ஜோஹருக்கு உதவி இயக்குனராக பணிப் புரிந்தார். 2012 ஆம் ஆண்டு `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்' திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார். பல வெற்றி படங்களில் நடித்த வருண் தவான் ஜனவரி 24 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டில் அவரது தோழி மற்றும் காதலியான நடாஷா தலாலை திருமணம் செய்துக்கொண்டார்.

    கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி வருண் தவான் அப்பா ஆக போகிறார் என்ற செய்தியை இணையத்தில் பதிவிட்டார் . நேற்று வருண் தவான் மற்றும் நடாஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    வருண் தற்பொழுது அட்லி இயக்கத்தில் தமிழில் வெளிவந்த தெறி திரைப்படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • 2019 ஆம் ஆண்டு சந்தீப் புதோலியா என்ற நபரை இப்பெண் திருமணம் செய்துள்ளார்.
    • திருமணத்திற்கு பிறகு மேலும் வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் 27 வயது பெண் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். முதலில் இதை தற்கொலை என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் அவளது கணவர் மற்றும் மாமியார் தான் தங்கள் மகளின் மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.

    2019 ஆம் ஆண்டு சந்தீப் புதோலியா என்ற நபரை இப்பெண் திருமணம் செய்துள்ளார். கணவரின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் வரதட்சணை கொடுக்க பெண்ணின் தந்தை தெரிவித்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு மேலும் வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தினர் அப்பெண்ணை கொடுமைப்படுத்த, இது தொடர்பாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளிக்க பின்னர் இருவீட்டாரும் சமரசத்துக்கு வந்துள்ளனர்.

    இதனையடுத்து இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்தது அவளது மாமியாருக்கு பிடிக்கவில்லை என்று பெண்ணின் தந்தை தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த கொலையை நேரில் பார்த்த அப்பெண்ணின் 4 வயது மகள், தாயை அடித்துக்கொன்று தந்தை தூக்கில் தொங்கவிட்டது போன்று ஓவியம் வரைந்துள்ளார். இதனையடுத்து அப்பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர். 

    ×