என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்டாண்ட் அப் காமெடி"
- காமெடியன் மேடையில் பலதரப்பட்ட விஷயங்களைப் பேசியபடி பார்வையாளர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்
- தான் சிரிப்பூட்டவே விரும்பியதாகவும், அது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்றும் அல்பெர்டோவிடம் வேண்டியுள்ளார்
ஸ்பெயினில் உள்ள அளிகாண்டே நகரில் நேற்று இரவு நடந்த ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியின்போது மேடையில் ஏறி காமெடியனின் முகத்தில் நபர் ஒருவர் குத்து விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜேமி கரவாகா என்ற ஸ்டான்ட் அப் காமெடியன் மேடையில் பலதரப்பட்ட விஷயங்களைப் பேசியபடி பார்வையாளர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் ஆல்பர்டோ புகிலட்டோ என்ற இசைக்கலைஞரும் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு இடையில், காமெடி செய்வதாக நினைத்துக்கொண்டு ஆல்பர்டோவின் 3 மாத குழந்தை குறித்து கோபமூட்டும் வகையில், பாலியல் ரீதியாக குறிப்பிட்டு காமெடியன் ஜேமி பேசத் தொடங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆல்பர்டோ நேராக விறுவிறு என மேடைக்கு சென்று காமெடியன் ஜேமியின் முகத்தில் ஒரு குத்து வைத்து அவரை நிலைகுலையச் செய்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனைத்தொடர்ந்து ஜேமி தனது சமூக வலைதள பக்கத்தில், தான் சிரிப்பூட்டவே விரும்பியதாகவும், அது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்றும் அல்பெர்டோவிடம் வேண்டியுள்ளார். இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆல்பெர்ட்டோ ஜேமியின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
- பரத் பாலாஜி என்பவர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவில் பேசினார்.
- இதை கேட்டு பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.
ஸ்டாண்ட் அப் காமெடி என்ற பெயரில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து அவதூறாக பேசி இளைஞர் ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
பரத் பாலாஜி என்பவர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவில், ஜவகர்லால் நேருவையும், மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவியையும் தொடர்புபடுத்தியும், காந்தி Father of the nation என்றும் நேரு daddy of the nation என்றும் பேசியுள்ளார்.
மேலும் பல இடங்களில் நேருவை குறிப்பிட்டு ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். இதை கேட்டு பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

இதன் வீடியோவானது இணையத்தில் பரவிய நிலையில் பாலாஜியின் தரக்குறைவான பேச்சுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
- நேருவை குறிப்பிட்டு ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார்.
- புகழ்பெற்ற தலைவர்களை பற்றி அவதூறாக பேசி விளம்பரம் தேடுவது வாடிக்கையாகி விட்டது.
ஸ்டாண்ட் அப் காமெடி என்ற பெயரில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து அவதூறாக பேசி இளைஞர் ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
பரத் பாலாஜி என்பவர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவில், ஜவகர்லால் நேருவையும், மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவியையும் தொடர்புபடுத்தியும், காந்தி Father of the nation என்றும் நேரு daddy of the nation என்றும் பேசியுள்ளார். மேலும் பல இடங்களில் நேருவை குறிப்பிட்டு ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார். இதை கேட்டு பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

இந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க பலரும் வலியறுத்தி வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
STANDUP COMEDY என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக, அவரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பரத் பாலாஜி என்பவர் பேசிய பேச்சை வன்மையாகவும், கடுமையாகவும் கண்டிக்கின்றேன். புகழ்பெற்ற தலைவர்களை பற்றி அவதூறாக பேசி விளம்பரம் தேடுவது வாடிக்கையாகி விட்டது.
கண்ணியக்குறைவான இவரின் பேச்சு காங்கிரஸ் பேரியக்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினருக்கும் மிகுந்த மனவுளைச்சலை உண்டாக்கியுள்ளது. வரலாறு குறித்து எள்ளளவும் அறியாத இவர் மீது தமிழ்நாடு காவல்துறை கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்யவேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விஷயத்தில் தலையிட்டு, உரிய முறையில் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- ஸ்டாண்ட் அப் காமெடி என்ற பெயரில் பரத் பாலாஜி என்பவர் நேரு குறித்து அவதூறாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.
- பரத் பாலாஜி என்பவர் பேசிய பேச்சை கண்டிப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஸ்டாண்ட் அப் காமெடி என்ற பெயரில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து அவதூறாக பேசி இளைஞர் ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பரத் பாலாஜி என்பவர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவில், ஜவஹர்லால் நேருவையும், மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவியையும் தொடர்புப்படுத்தியும், காந்தி Father of the nation என்றும் நேரு daddy of the nation என்றும் பேசியுள்ளார். மேலும் பல இடங்களில் நேருவை குறிப்பிட்டு ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார். இதை கேட்டு பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க பலரும் வலியறுத்தி வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "STANDUP COMEDY என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக, அவரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பரத் பாலாஜி என்பவர் பேசிய பேச்சை வன்மையாகவும், கடுமையாகவும் கண்டிக்கின்றேன். புகழ்பெற்ற தலைவர்களை பற்றி அவதூறாக பேசி விளம்பரம் தேடுவது வாடிக்கையாகி விட்டது.
கண்ணியக்குறைவான இவரின் பேச்சு காங்கிரஸ் பேரியக்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினருக்கும் மிகுந்த மனவுளைச்சலை உண்டாக்கியுள்ளது. வரலாறு குறித்து எள்ளளவும் அறியாத இவர் மீது தமிழ்நாடு காவல்துறை கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்யவேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விஷயத்தில் தலையிட்டு, உரிய முறையில் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நேரு குறித்து அவதூறாக பேசியதற்காக நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்பதாக ஸ்டாண்ட் அப் காமெடியன் பரத் பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார்.