search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமோஜி ராவு"

    • எனது வழிகாட்டியும் நலம் விரும்புபவருமான ஸ்ரீ ராமோஜி ராவ் அவர்களின் மறைவைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன்.
    • பதவியேற்பு விழா முடிந்ததும் அவரை சந்திக்க விரும்பினேன்.

    ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டி, ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமேஜி ராவ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.

    மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.45 மணிக்கு காலமானார்.

    இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பதிவில் இரங்களை தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    எனது வழிகாட்டியும் நலம் விரும்புபவருமான ஸ்ரீ ராமோஜி ராவ் அவர்களின் மறைவைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். பத்திரிகை, சினிமா, அரசியலில் சிறந்த கிங் மேக்கராக வரலாறு படைத்தவர். அவர் என் வாழ்க்கையில் எனக்கு வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார்.

    ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனர் ராமோஜி ராவுக்கு ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் அஞ்சலி நேரில் சென்று அஞ்சலி செலுத்தின்ர்.

    ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் கூறுகையில், "ராமோஜி ராவின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. பதவியேற்பு விழா முடிந்ததும் அவரை சந்திக்க விரும்பினேன். கடந்த ஒன்றரை தசாப்தங்களில் அரசுகள் அவரை மிகவும் தொந்தரவு செய்தன, ஆனால் அவர் இன்று வரை மக்கள் பக்கம் நின்றார். அவர் தெலுங்கு திரையுலகிற்கு நிறைய உள்கட்டமைப்புகளை உருவாக்கி இருக்கிறார். அவரது குடும்பத்திற்கு கடவுள் பலம் கொடுக்க ஜனசேனா சார்பாகவும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

    இந்நிலையில் திரைப்பட நடிகரும், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான சிரஞ்சீவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    அவர் கூறுகையில், "அவரது கனவை அவரது வாரிசுகள் முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றுவார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். எல்லோரும் அவருக்குள் ஒரு பெரிய மனிதரைப் பார்த்திருக்கலாம், ஆனால் நான் அவரிடம் ஒரு சிறு குழந்தையைப் பார்த்தேன். 2009 இல், நான் பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்காக அவரை அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெறுவது வழக்கம்.. தனது கருத்துக்களை டைரியில் பல்வேறு வண்ண மைகளால் எழுதுவார் அவரது குடும்பம் மட்டுமல்ல, தெலுங்கு மக்களும் சிறந்த மனிதரை இழந்துவிட்டார்கள் என்று எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

    ×