search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி தூதரகம்"

    • ஆசியாவில் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்த பிரெஞ்சு குடிமக்களுக்கு இன்று தேர்தல் நடந்தது.
    • புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் வாக்கு சாவடியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.

    புதுச்சேரி:

    ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளை ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு நேரடியாக தேர்ந்தெடுப்பார்கள்.

    5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தேர்தல் உலகளாவிய முறையில் நடைபெறும். 2024 தேர்தல் களுக்காக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 720 இடங்களில் பிரான்சுக்கு 81 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பிரெஞ்சு எம்.பி.க்கள் உலகம் முழுவதும் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஐரோப்பிய தேர்தல்கள் ஜூன் 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் நடைபெறுகிறது.

    ஆசியாவில் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்த பிரெஞ்சு குடிமக்களுக்கு இன்று தேர்தல் நடந்தது. வெளிநாட்டில் உள்ள குடிமக்களுக்கு அவர்கள் வசிக்கும் நாட்டில் இருந்தே வாக்களிக்கும் உரிமையை பிரான்ஸ் அரசு வழங்குகிறது.

    இதன்படி கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 4 ஆயிரத்து 546 பிரெஞ்சு குடிமக்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். இவர்கள் வாக்களிக்க வசதியாக புதுச்சேரியில் 2 சென்னை மற்றும் காரைக்காலில் தலா ஒன்று என 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு 38 வெவ்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஐரோப்பிய தேர்தல்களில் பங்கேற்கின்றனர். புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் வாக்கு சாவடியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.

    பிரான்சின் கான்சல் ஜெனரல் லிஸ் டால்போட் பாரே, புதுச்சேரியில் வாக்களித்தார். தொடர்ந்து அவர் வாக்களிக்கும் செயல் முறையையும் மேற்பார்வை யிட்டார். மாலை 6 மணி வரை வாக்கு பதிவு நடக்கிறது.

    புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகம் மற்றும் சென்னையில் உள்ள பியூரோ டி பிரான்ஸ் தேர்தலுக்கான ஏற்பாடுளை செய்திருந்தது. 

    ×