என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஷோய்ப் அக்தர்"
- டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
- 120 ரன்களை இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது.
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதைத் தொடர்ந்து 120 ரன்களை இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி போட்டியில் தோற்றது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷோயப் அக்தர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் "இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்தியா 11 ஓவர்கள் முடிவில் 82 ரன்களில்தான் இருந்தார்கள். 160 ரன்கள் அடிக்க நினைத்த இந்திய அணியால் அதை செய்ய இயலவில்லை. ஆனால் பாகிஸ்தானிற்கு அப்படி கிடையாது அவர்கள் எளிதில் வெற்றி பெற்றிருக்கலாம், ரிஸ்வான் இன்னும் கூடுதலாக 20 ரன்கள் எடுத்து இருந்தால் போதுமானதாக இருந்திருக்கும்."
"இந்த போட்டியில் வெற்றி எளிமையாகவே இருந்தது, கொஞ்சம் மூளையை உபயோகப்படுத்தி இருந்தால் ஜெயித்திருக்கலாம், 47 பந்துகளில் 46 ரன்கள் தேவை. ஃபகர் இன்னும் ஆட்டமிழக்காமல் இருக்கிறான் அப்படி இருந்தும் நம்மால் ஜெயிக்க முடியவில்லை. இது மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்று அவரது வேதனையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளார்.
இந்த வீடியோவுக்கு அவர், "ஏமாற்றப்பட்டேன், காயமுற்றேன்" போன்ற வார்த்தைகளை நான் பதிவிட தயாராக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்," என தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.