search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரகாட்டக்காரன்"

    • ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'துப்பாக்கி'.
    • துப்பாக்கி படத்தின் நீக்கப்பட்ட காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

     துப்பாக்கி' படத்தில் விஜய்யின் வாழைப்பழ காமெடி.. வைரலாகும் வீடியோ

    ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'துப்பாக்கி'. விஜய்யின் கேரியரில் முக்கியமான படமாகவும் துப்பாக்கி அமைந்தது. விடுமுறையில் ஊருக்கு வரும் ராணுவ வீரன் மும்பை நகருக்குள் ஸ்லீப்பர் செல்களாக இயங்கும் தீவிரவாதிகளுடன் மோதும் கதைக்களத்தை கொண்ட இப்படம் எந்த இடத்திலும் லேக் ஆகாமல் விறுவிறுப்பாக செல்லும்.

     

    விஜய்க்கும் கதாநாயகி காஜல் அகர்வாலுக்குமான கெமிஸ்ட்ரி கச்சிதமாக பொருந்தியிருக்கும். சீரியஸான கதைக்களம் என்றாலும் விஜய்யின் சிறு சிறு மேனரிசம்களும் டயலாக்களும் அவ்வப்போது மெல்லிய சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். அந்த வகையில் துப்பாக்கி படத்தின் நீக்கப்பட்ட காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

    தமிழ் சினிமாவின் கிளாசிக் படமான கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி செந்திலின் பல காமெடி காட்சிகள் டிரெண்ட்செட்டர்களாக மாறின. அதில் ஒன்று வாழைப்பழ காமெடி. பணம் கொடுத்து செந்திலை 2 வாழைப்பழம் வாங்கி வர சொல்வார் கவுண்டமணி. ஆனால் செந்தில் 2 பழத்தை வாங்கி அதில் ஒன்றை வரும் வழியிலேயே சாப்பிட்டு விடுவார். கவுண்டமணி 1 பழம் மட்டுமே இருப்பதை பார்த்துவிட்டு மற்றோரு பழம் எங்கே என கேட்பார். அதற்கு செந்தில் அது தான் அண்ணே இது என கூற அங்கு களேபரமே ஏற்பட்டுவிடும்.

     

    தற்போது வெளியாகி உள்ள துப்பாக்கி படத்தின் நீக்கப்பட்ட காட்சியில் இந்த காமெடியை கதைப்படி மும்பையில் தனது நண்பன் வேலை பார்க்கும் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளவர்களுக்கு ஹிந்தியில் மிமிக்கிரி செய்து சிரிக்க வைக்கிறார் ஜெக்தீஷ். அதாவது கதைப்படி ஜெக்தீஷாக நடிக்கும் விஜய். இந்த டேலிட்டட் காட்சிகள் வைரலான நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார்.

    இதற்கிடையில் ஜூன் 22 விஜய் பிறந்தநாள் வர உள்ள நிலையில் ஜூன் 21 ஆம் தேதி துப்பாக்கி படம் ரீரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×