search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காகிரஸ்"

    • பா.ஜ.கவின் என்.டி.ஏ அரசு வெகு நாட்கள் நீடிக்காது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
    • நாட்டு மக்களுக்கு நன்மையானதாக இருந்தால் சரிதான். நாட்டின் வளர்ச்சிக்காக நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்

    பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி மோடி தொடர்ந்து 3 வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 72 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

    இந்த தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையை இழந்து நிதிஷ் குமாரின் ராஷ்டிரிய ஜனதா தளம் [ 12 சீட்] சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் [16 சீட்] ஆகிய கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

     

    காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களை கைப்பற்றி பாராளுமன்றத்தில் தங்களின் பிரதிநிதித்துவத்தை வலுவாக நிறுவியுள்ளது. நிதிஷ் குமாரும் சந்திரபாபு நாயுடுவும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்திருந்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்னும் சூழலில் பா.ஜ.கவின் என்.டி.ஏ அரசு வெகு நாட்கள் நீடிக்காது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.

    இன்று பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, என்.டி.ஏ கூட்டணி தலைமையிலான அரசு தவறுதலாக உருவாகியுள்ளது. .மோடியிடம் அரசைத் தக்கவைக்க எந்த உறுதியும் இல்லை. இது ஒரு மைனாரிட்டி அரசு. எனவே இந்த அரசு எந்த நேரமும் சரிய வாய்ப்புள்ளது. ஆனால் இந்த அரசு தொடரவே நாங்கள் விரும்புகிறோம். அது நாட்டு மக்களுக்கு நன்மையானதாக இருந்தால் சரிதான். நாட்டின் வளர்ச்சிக்காக நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாமலேயே பல முக்கிய சட்டங்களை பெரும்பான்மை வைத்திருந்ததால் பா.ஜ.க தன்னிச்சையாக நிறைவேற்றியது. இனி எந்த சட்டமாக இருந்தாலும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்தையும் கேட்க வேண்டிய நிர்பந்தம் பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். 

    ×