search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமேசான் நிறுவனம்"

    • ராஜ் குமார் மீனா (23), சுபாஷ் குர்ஜார் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.11.45 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அமேசான் நிறுவனத்தில் பொருட்களை ஆர்டர் செய்து ரூ.1.29 கோடி மோசடி செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட ராஜ் குமார் மீனா (23), சுபாஷ் குர்ஜார் (27) ஆகியோர் மீது அசாம், ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சுபாஷ் மற்றும் ராஜ் குமார் ஆகியோர் அமேசானில் அதிக மதிப்புள்ள கேமராக்கள், ஐபோன்கள் மற்றும் மடிக்கணினிகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள வேறு சில பொருட்களையும் போலியான அடையாளங்களைப் பயன்படுத்தி ஆர்டர் செய்வார்கள். டெலிவரி நேரத்தில், அவர்கள் டெலிவரி முகவர்களின் கவனத்தை திசை திரும்புவார்கள். பின்னர் அதிக மதிப்புடைய பொருட்களின் ஸ்டிக்கரை குறைவான மதிப்புடைய பொருட்களுக்கு ஒட்டுவார்கள். குறைவான மதிப்புடைய பொருட்களின் ஸ்டிக்கரை அதிக மதிப்புடைய பொருட்களுக்கு ஓட்டுவார்கள்

    ஸ்டிக்கர்களை மாற்றிய பிறகு அதிக மதிப்புமிக்க பொருளை குறைவான மதிப்புடைய ஸ்டிக்கரை பயன்படுத்தி வாங்கி விடுவார்கள். அதிக மதிப்புமிக்க பொருளின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட குறைவான மதிப்புடைய பொருளுக்கு தவறான OTP சொல்லி இறுதியில் ஆர்டரை ரத்து செய்து விடுவார்கள்.

    அமேசானின் டெலிவரி பார்ட்னரான மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் இவர்களின் தந்திரத்தை கண்டுபிடித்து அமேசான் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து ராஜ் குமார், சுபாஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.11.45 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

    • அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வெப்ப அலையால் அவதிப்படும் வேர்ஹவுஸ் தொழிலார்களின் பணிச்சூழல் இன்னும் மோசமானதாக உள்ளது.
    • இடைவேளை எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று தினமும் உறுதிமொழி எடுக்க நிர்பந்திக்கப்படுகிறோம் என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பன்னாட்டு ரீடெயில் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா நெடுகிலும் வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்துள்ளது. ஆன்லைன் ஆர்டர் டெலிவரியில் இந்தியாவில் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனத்துக்கும் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட அமேசான் நிறுவனத்துக்கும் இடையில் கடுமயான போட்டி நிலவி வருகிறது.

    இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பொருட்களுக்கான தேவை மனிதர்களிடம் அதிகரித்துள்ளதால் இந்த வகை நிறுவனங்களின் தேவையும் மக்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கட்டமைப்பு ஒருபுறம் வலுவடைந்திருந்தாலும் மறுபுறம் நாடு முழுவதிலும் சிதறிக் கிடக்கும் அதன் தொழிலாளர்களுக்கு முறையான உரிமைகள் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பணிச்சுமை என்பதையும் தாண்டி பணியாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படும் அவல நிலையே தற்போது நிலவி வருகிறது.

     

    படித்த படிப்புக்கு உரிய வேலை கிடைக்காததால் பட்டதாரிகளே அதிகம் டெலிவரி வேலைகளிலும் வேர்ஹவுஸ் குடோன் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க தொழிலாளர்களுக்கு வரம்பு மீறிய அழுத்தம் அளிக்கப்படுவதற்காக அமேசான் நிறுவனதின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வெப்ப அலையால் அவதிப்படும் வேர்ஹவுஸ் தொழிலார்களின் பணிச்சூழல் இன்னும் மோசமானதாக உள்ளது. ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்ட டார்கெட்டை எட்டாமல் யாரும் கழிவறைக்கு செல்ல மாட்டோம், தண்ணீர் குடிக்க செல்ல மாட்டோம், இடைவேளை எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று தினமும் உறுதிமொழி எடுக்க நிர்பந்திக்கப்படுகிறோம் என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    குடோனில் சுமார் 50 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்ப நிலையில் பெரிய பெரிய லாரிகளில் வந்திறங்கும் பொருட்களை இறக்கி வைப்பது உள்ளிட்டவை இந்த இரக்கமற்ற டார்கெட்டில் அடங்கும். ரூ.10,088 சமபலத்துக்கு தினமும் 10 மணிநேரம் இவர்களை வேலை வாங்குகின்றனர் என்று கூறப்படுகிறது.

     

    இதில் பெண் தொழிலாளர்களின் பாடு அதிக திண்டாட்டமாக உள்ளது. உரிய கழிவறை வசதிகள் இல்லாதது, அதிக உடல் உழைப்பு வேளைகளில் ஈடுபடுத்தப்படுவது உள்ளிட்டவை அவர்களுக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள அமேசான் தளங்களிலும் இதே நிலையே உள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த வாரம் மிகவும் பளு வாய்ந்த பெட்டிகளை தூக்க சொல்கிறார்கள் என வேலையின்போது வீடியோ வெளியிட அமெரிக்க ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×