என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேர்ஹவுஸ்"
- அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வெப்ப அலையால் அவதிப்படும் வேர்ஹவுஸ் தொழிலார்களின் பணிச்சூழல் இன்னும் மோசமானதாக உள்ளது.
- இடைவேளை எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று தினமும் உறுதிமொழி எடுக்க நிர்பந்திக்கப்படுகிறோம் என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பன்னாட்டு ரீடெயில் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா நெடுகிலும் வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்துள்ளது. ஆன்லைன் ஆர்டர் டெலிவரியில் இந்தியாவில் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனத்துக்கும் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட அமேசான் நிறுவனத்துக்கும் இடையில் கடுமயான போட்டி நிலவி வருகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பொருட்களுக்கான தேவை மனிதர்களிடம் அதிகரித்துள்ளதால் இந்த வகை நிறுவனங்களின் தேவையும் மக்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கட்டமைப்பு ஒருபுறம் வலுவடைந்திருந்தாலும் மறுபுறம் நாடு முழுவதிலும் சிதறிக் கிடக்கும் அதன் தொழிலாளர்களுக்கு முறையான உரிமைகள் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பணிச்சுமை என்பதையும் தாண்டி பணியாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படும் அவல நிலையே தற்போது நிலவி வருகிறது.
படித்த படிப்புக்கு உரிய வேலை கிடைக்காததால் பட்டதாரிகளே அதிகம் டெலிவரி வேலைகளிலும் வேர்ஹவுஸ் குடோன் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க தொழிலாளர்களுக்கு வரம்பு மீறிய அழுத்தம் அளிக்கப்படுவதற்காக அமேசான் நிறுவனதின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வெப்ப அலையால் அவதிப்படும் வேர்ஹவுஸ் தொழிலார்களின் பணிச்சூழல் இன்னும் மோசமானதாக உள்ளது. ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்ட டார்கெட்டை எட்டாமல் யாரும் கழிவறைக்கு செல்ல மாட்டோம், தண்ணீர் குடிக்க செல்ல மாட்டோம், இடைவேளை எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று தினமும் உறுதிமொழி எடுக்க நிர்பந்திக்கப்படுகிறோம் என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குடோனில் சுமார் 50 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்ப நிலையில் பெரிய பெரிய லாரிகளில் வந்திறங்கும் பொருட்களை இறக்கி வைப்பது உள்ளிட்டவை இந்த இரக்கமற்ற டார்கெட்டில் அடங்கும். ரூ.10,088 சமபலத்துக்கு தினமும் 10 மணிநேரம் இவர்களை வேலை வாங்குகின்றனர் என்று கூறப்படுகிறது.
இதில் பெண் தொழிலாளர்களின் பாடு அதிக திண்டாட்டமாக உள்ளது. உரிய கழிவறை வசதிகள் இல்லாதது, அதிக உடல் உழைப்பு வேளைகளில் ஈடுபடுத்தப்படுவது உள்ளிட்டவை அவர்களுக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள அமேசான் தளங்களிலும் இதே நிலையே உள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த வாரம் மிகவும் பளு வாய்ந்த பெட்டிகளை தூக்க சொல்கிறார்கள் என வேலையின்போது வீடியோ வெளியிட அமெரிக்க ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்