search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய மொபைல் சந்தாதாரர்கள்"

    • ஏர்டெல் நிறுவனம் 7.35 லட்சம் புதிய பயனாளர்களை இணைந்துள்ளது.
    • புதிய இணைப்புகளுடன், ஜியோவின் சந்தைப் பங்கு 40.48 சதவீதமாகும்.

    முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், ஏர்டெல் நிறுவனத்தை ஒப்பிடும்போது 2024 ஏப்ரல் மாதத்தில் 26.87 லட்சத்துக்கும் அதிகமான புதிய மொபைல் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதுவே, ஏர்டெல் நிறுவனம் 7.35 லட்சம் புதிய பயனாளர்களை மட்டுமே இணைந்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச் மாத இறுதியில் 1,199.28 மில்லியனிலிருந்து 24, ஏப்ரல் இறுதியில் 1,201.22 மில்லியனாக உயர்ந்துள்ளது, இதன் மூலம் மாதாந்திர வளர்ச்சி விகிதம் 0.16 சதவீதமாக உள்ளது.

    நகர்ப்புற தொலைபேசி சந்தா மார்ச் இறுதியில் 665.38 மில்லியனில் இருந்து ஏப்ரல் இறுதியில் 664.89 மில்லியனாக குறைந்துள்ளது.

    இருப்பினும் அதே காலகட்டத்தில் கிராமப்புற சந்தா 533.90 மில்லியனில் இருந்து 536.33 மில்லியனாக அதிகரித்துள்ளது.

    ஏப்ரல் மாதத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொலைபேசி சந்தாக்களின் மாதாந்திர வளர்ச்சி விகிதம் முறையே 0.07 சதவீதம் மற்றும் 0.45 சதவீதமாக இருந்தது.

    எவ்வாறாயினும், வோடபோன் ஐடியா இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கூடுதலா 7.35 லட்ச சந்தாதாரர்களை இழந்ததால் தொடர்ந்து வீழ்ச்சியில் இருந்து வருவதாக டிராய் தெரிவித்துள்ளது.

    இந்த புதிய இணைப்புகளுடன், ஜியோவின் சந்தைப் பங்கு 40.48 சதவீதமாகவும், ஏர்டெல் 33.12 சதவீதமாகவும், வோடபோன் ஐடியா 18.77 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

    ஏப்ரல் மாத இறுதியில் மொத்த தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்தாதாரர்களின் பங்கு முறையே 55.35 சதவீதம் மற்றும் 44.65 சதவீதம் ஆகும்.

    ×