search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கறுப்பு கயிறு"

    • ஜாதகத்தில் ராகு கேது பலவீனமானவர்கள் காலில் கருப்பு கயிறு அணிவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள்.
    • செவ்வாய்கிழமை சனி பகவானை வணங்கி, கருப்பு கயிறில் 9 முடிச்சுகள் போட்டு, அதன் பிறகு அவர்கள் காலில் அணியலாம். இதனால் பணம் வரவு அதிகமாகும் என்பது நம்பிக்கை.

    சுத்திப்போடுவது, திருஷ்டி கழிப்பது போலவே, காலில் கயிறு கட்டுதலையும், நம்முடைய முன்னோர்கள் கடைப்பிடித்தபடியே வந்திருக்கிறார்கள்.. ஆண்கள் வலது கால்களிலும், பெண்கள் என்றால் இடது காலிலும் இப்படி கயிறு கட்டுவார்கள். இதற்கும் அறிவியல் காரணமும் உண்டு, ஆன்மீக காரணமும் உண்டு.

    அறிவியல் காரணம்: பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்ற இந்த 3 பொருட்களையும் கயிறு போல திரித்து கையில் அணிந்து கொள்வது பல பலன்களை பெற்றுத்தரும்.. குறிப்பாக, அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டது இந்த 3 பொருட்களுக்கு உண்டு.. அதுபோலவே, நவக்கிரகத்தின் கதிர் வீச்சுகளை, ஈர்க்கும் தன்மை இதுபோன்ற கயிறுகளுக்கும் உண்டு.. காப்புகளுக்கும் உண்டு என்பதால்தான், கைகளில் இவைகளை கட்டுகிறார்கள்..


    அதுமட்டுமல்ல, கருப்பு கயிறு மனதில் நேர்மறை சக்தியை அதிகரிக்கக்கூடியது... இந்த தன்மை , சிவப்பு நிறகயிறுகளுக்கு கிடையாது என்பதாலேயே கருப்பு கலரிலேயே கைகள், மற்றும் கால்களில் கயிறு கட்டுகிறார்கள்.

    உடல்நல கோளாறு: பெரும்பாலும், கருப்பு நிறங்கள், சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்களை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டது.. இந்த கறுப்பு கயிறு கட்டுவதால் நீண்ட காலமாக குணமடையாத தீராத நோய், உடல் நல கோளாறுகள் போன்றவையும் குணமாகும்.

    நம்முடைய உடலில் பல்வேறு முடிச்சுகள் உள்ளன. இந்த ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் ஒவ்வொரு இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. அந்த வகையில் இருக்கும் முக்கிய முடிச்சுப்பகுதி நம்முடைய கணுக்கால் பகுதி. நமது எண்ணங்கள் மற்றும் மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல்பாடும் அமைகின்றன. எனவேதான், கணுக்கால் பகுதியில் கயிறு கட்டினாலும் நாடியின் இயக்கம் சீராவதுடன், எண்ணங்களும், மனநிலையும் சரிநேர்க்கோட்டில் அலைபாயாமல் இருக்கும்.

    நிதிநிலைமை: ஜோதிடப்படி, கணுக்காலில் கருப்பு கயிறு கட்டுவதிலும் நிறைய நன்மைகள் சொல்லப்படுகின்றன. கணுக்காலில் கருப்பு கயிறு கட்டினால் நிதிநிலைமை பலப்படும் என்பார்கள். காரணம், சனி பகவான் முதலில் ஒருவரின் கால்களை தான் பற்றுவாராம். ராகு, கேது பாதிப்புகள் ஏற்படாது. கயிறு கட்டும் முன் சனி தேவ மந்திரத்தை 21 முறை ஜபிக்க வேண்டுமாம். அதிலும், பொருளாதார பிரச்சனை இருப்பவர்கள், செவ்வாய்கிழமை சனி பகவானை வணங்கி, கருப்பு கயிறில் 9 முடிச்சுகள் போட்டு, அதன் பிறகு அவர்கள் காலில் அணியலாம். இதனால் பணம் வரவு அதிகமாகும் என்பது நம்பிக்கை.


    எனவே, சனி கிரகத்தின் தாக்கம் குறைவாக இருப்பதுடன், ஜாதகத்தில் ராகு கேது பலவீனமானவர்கள் காலில் கருப்பு கயிறு அணிவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, கருப்பு கலர் என்றாலே, கெட்ட விஷயங்களை தடுக்கும் ஒரு நிறமாக கருதப்பட்டு வருகிறது. எனவே, கருப்பு கயிறுகளை அணிவது எதிர்மறை ஆற்றல் மற்றும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆவிகளை விலக்கி வைக்குமாம். கணுக்காலில் கயிறு கட்டுவது, தடைபட்ட வாழ்க்கையையும் வலுவாக்க உதவுகிறது. கெட்ட விஷயங்களிலிருந்து விலக்கி பாதுகாப்புத்தன்மையை உணரவைக்கிறது. பெண்கள் காலில், கருப்பு கயிறை கட்டுவதானால் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டிக்கொள்ளலாம். அதிலும், சனிக்கிழமைகளில் கட்டுவது இன்னும் நல்லது. இந்த 9 முடிச்சுகளும் தனித்தனியாக இருப்பது நல்லது.

    ராசிகள்: கருப்பு தவிர வேறு எந்த நிறக்கயிறும் கட்டக்கூடாதாம். கறுப்புக் கயிற்றை கட்டியதுமே, தினமும் ருத்ர காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வரும்போது, இந்த கயிறுகள், அதிக சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் என்கிறார்கள். தனுசு, துலாம், கும்பம், ராசி போன்றவர்களுக்கு கருப்பு கயிறு மிகவும் நல்லது என்றும், விருச்சிகம், மேஷ ராசியில் பிறந்தவர்கள் கருப்பு நிறத்தை அணிவது உகந்தது கிடையாது என்றும் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

    ×