search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுண்டவுன்"

    • 2024 ஒலிம்பிக் தீபம் போட்டி நடைபெறும் நாடானா பாரீஸில் ஏற்றப்பட்டது.
    • ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    கொரோனாவால் ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த கடந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று 7 பதக்கம் வென்றது. இந்த ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதை குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

    இந்நிலையில் 2024 ஒலிம்பிக் தீபம் போட்டி நடைபெறும் நாடானா பாரீஸில் ஏற்றப்பட்டது. இதனை ஃபிஃபாவின் உலகளாவிய கால்பந்து மேம்பாட்டுத் தலைவர் அர்சென் வெங்கர் ஏற்றி வைத்தார். இதன்மூலம் 30 நாட்கள் கவுண்ட் டவுன் தொடங்கி உள்ளது.

    ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றாலும், கிரேக்கத்தின் தென் பகுதி நகரான ஒலிம்பியாவில் பாரம்பரிய முறையில், நடனம், நாடகம் போன்ற கலைவிழாக்கள் நடத்தி இச்சுடர் ஏற்றப்படும். அப்போது நீளமான உடையணிந்த வீராங்கனை ஒருவர், ஒளிக்கான கிரேக்கக் கடவுள் அபோலோவிடம் பிரார்த்தனை செய்த பிறகு, நிலத்தில் மண்டியிட்டு சூரிய ஒளியால் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றுவார்.

     

    இது உலக நாடுகளை சுற்றி வந்து இறுதியில் போட்டி நடைபெறும் இடத்தை வந்து அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×