என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "யுபிஎஸ்இ"
- கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது 2 மகள்கள் உள்ளனர்.
- தந்தை ஓம் பிர்லாவின் பொது சேவையே சிவில் சர்வீஸ் எழுத தனக்கு உந்துசக்தியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் கடந்த ஜூன் 26 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். சபாநாயகர் பதவிக்கான இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் தோல்வி அடைந்தார். இதனையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகராக ஓம் பிர்லா செய்யப்பட்டார். ராஜஸ்தானைச் சேர்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பல்ராம் ஜாகருக்கு பிறகு 39 வருடங்கள் கழித்து இரண்டு முறை மக்களவை சபாநாயகர் ஆகும் பெருமையை ஓம் பிர்லா பெற்றுள்ளார்.
இந்நிலையில் மக்களவையில் சபாநாயகராக பதவியேற்றுள்ள பாஜக மூத்த தலைவர் ஓம் பிர்லா கடந்த நாட்களில் பேசுபொருளாக மாறியுள்ளார். நீண்ட நெடிய அரசியல் பின்னணி கொண்ட ஓம் பிர்லா ராஜஸ்தானை சேர்நதவர் ஆவார். கடந்த 2003 முதல் 2013 வரை ராஜஸ்தான் மாநில கோட்டா சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஓம் பிர்லா கடந்த 2014 தேர்தலில் பாஜக சார்பில் கோட்டா தொகுதியின் எம்.பியாக தேர்வாகி பாராளுமன்றம் சென்றார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது 2 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா கடந்த 2019 ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து அகாடெமியில் பயிற்சி பெற்று ஐஏஎஸ் ஆன அஞ்சலி பிர்லா தற்போது ரயில்வே அமைச்சகத்தின்கீழ் பணியாற்றி வருகிறார்.
தனது வெற்றி குறித்து தற்போது PTI செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள அஞ்சலி பிர்லா, தந்தை ஓம் பிர்லாவின் பொது சேவையே சிவில் சர்வீஸ் எழுத தனக்கு உந்துசக்தியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் நாட்டு மக்களுக்காக தனது தந்தை செய்து வரும் சேவையைபோல தானும் இந்த சமுதாயத்துக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் ஆவதற்கு முன்னதாக அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டிருந்தார். மேலும் தேர்வு எழுத்தமேலேயே அஞ்சலி பிர்லா ஐஏஎஸ் ஆனதாக சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டப்பட்டது வருவது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்