என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ணா"

    • ஜான்வி கபூருக்கு தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம்.
    • ‘கர்ணா’ படத்திலும் நடிக்க ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தியில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக உயர்ந்து இருக்கிறார்.

    இவரது தந்தை போனி கபூர் தமிழில் அஜித்குமார் நடித்த 'நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு' ஆகிய படங்களை தயாரித்துள்ளார். ஜான்வி கபூருக்கு தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம். இதற்காக கதை கேட்டு வந்தார்.

    இந்த நிலையில் ஜூனியர் என்.டி.ஆருடன் 'தேவாரா' தெலுங்கு படத்திலும், சூர்யா நாயகனாக நடிக்க தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராவதாக அறிவிக்கப்பட்ட 'கர்ணா' படத்திலும் நடிக்க ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

    'தேவாரா' படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். 'கர்ணா' படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த படத்தை கைவிட படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் ஜான்வி கபூருக்கு தமிழ் படத்தில் அறிமுகமாக இருந்த வாய்ப்பு கைநழுவி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×