search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டா டக்கரா"

    • கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.
    • 600 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. 600 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    படத்தின் விஸ்வல் எஃபக்டுகள் ஹாலிவுட் தரத்தில் மேற்கொண்டுள்ளனர். கமல்ஹாசன் சுப்ரீம் யாஸ்கின் என்ற கதாப்பாத்திரத்தில் சிறிது நேரம் வந்தாலும் மக்கள் மனதில் பதிந்துள்ளார். கல்கி இரண்டாம் பாகமும் வர இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது.

    தற்பொழுது படத்தின் முதல் பாடலான டா டக்கரா வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இது பிரபாஸ் மற்றும் திஷா பதானி இடையே உள்ள காதல் பாடலாக அமைந்துள்ளது. பாடலின் காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இரண்டு நாட்களில் 298.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இந்தியாவில் மட்டும் 95 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்று மற்றும் நாளை வார விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் விரைவில் ரூ. 400 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×