என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூபிஐ பரிவர்த்தனை"

    • நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.
    • UPI சேவை முடங்கியதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் யுபிஐ [யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்] டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.

    நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.

    இந்நிலையில், இந்தியா முழுவதும் பல இடங்களில் பணப் பரிவர்த்தனைக்கான UPI சேவை முடங்கியதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யூபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்த முடியாததால் UPI Down என பயனர்கள் பலரும் தங்களது சமூகவலைத் தளங்களில் வேகமாக பதிவிட்டு வருகின்றனர்.

    • ஜூன் மாதத்தில் சராசரியாக தினசரி பரிவர்த்தனை தொகை ரூ. 66,903 கோடியை எட்டியது.
    • இதில் தினசரி பரிவர்த்தனை எண்ணிக்கை 46.3 கோடி.

    புதுடெல்லி:

    யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) அடிப்படையிலான பரிவர்த்தனைகள் ஜூன் மாதத்தில் 13.89 கோடியை எட்டியுள்ளன. இது கடந்த ஜூன் ஆண்டை காட்டிலும் (YoY) 49 சதவீதம் உயர்ந்துள்ளது என்று தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) தரவு மூலம் தெரிய வந்தது.

    அதன்படி ஜூன் மாதத்தில் பரிவர்த்தனை அளவு ரூ.20.07 லட்சம் கோடியாகும். இதுவே மே மாதத்தில் பரிவர்த்தனை அளவு ரூ.20.45 லட்சம் கோடியாக இருந்தது. இது மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதத்தில் 1.9 சதவீதம் குறைவாகும்.

    ஜூன் மாதத்தில் சராசரியாக தினசரி பரிவர்த்தனை தொகை ரூ. 66,903 கோடியை எட்டியது. இதில் தினசரி பரிவர்த்தனை எண்ணிக்கை 46.3 கோடி. இது 2016-ம் ஆண்டு UPI நடைமுறைக்கு வந்ததில் இருந்து, மே மாதத்தில் UPI எண்கள் மதிப்பு மற்றும் பரிவர்த்தனை எண்ணிக்கை அடிப்படையில் அதிகபட்சமாகும்.

    ஜூன் மாதத்தில், உடனடி பணம் செலுத்தும் சேவை (IMPS) பரிவர்த்தனை அளவு மே மாதத்தை (55.8 கோடி) ஒப்பிடும் போது ஜூன் மாதத்தில் 7 சதவீதம் (51.7 கோடி) குறைந்துள்ளது.

    ஆதார் கார்டை வைத்து பணம் பரிவரித்தனை முறையில் (AePS) மே மாதத்தில் 9 கோடி, ஏப்ரல் மாதத்தில் 9.5 கோடியில் இருந்து ஜூன் மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்து 10 கோடியாக உயர்ந்துள்ளது.

    ×