என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உலக நாயகன்"
- நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது.
- கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய தசாவதாரம் படத்தில் 'உலக நாயகனே' என்று தொடங்கும் பாடலே இடம்பெற்றிருக்கும்.
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான கமல் ஹாசன் கடந்த 2018 ஆண்டு மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அரசியலில் குதித்தாலும் சினிமாவிலும் கவனம் செலுத்தி வரும் கமல் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
நடிப்பிற்காக சர்வதேச அளவில் விருதுகளை வாங்கிய கமல், உலகநாயகன் என்ற அடைமொழியுடன் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். கமல் 10 கெட் அப்களில் நடித்த கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய தசாவதாரம் படத்தில் 'உலக நாயகனே' என்று தொடங்கும் பாடலே இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் உலகநாயகன் உள்ளிட்ட பட்டங்களை குறிப்பிட்டு தன்னை யாரும் அழைக்க வேண்டாம் என்று திடீர் அறிவிப்பு ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கீழ்வருமாறு,
என் மீது கொண்ட அன்பினால் 'உலக நாயகன்' உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள், மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு.
சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான், பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது, திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது.
கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது.
எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன்.
இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். மனிதன் என்கிற ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் நான்.. என்று தெரிவித்துள்ளார்.
- இத்தனை வருடங்கள் கழிந்தும் ரஜினிகாந்த் இன்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.
- 70 வயது ஆனாலும் இன்னும் துடிப்புடன் பலப் படங்களை தயாரித்து மற்றும் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.
தமிழ் திரையுலகில் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் - க்கு அடுத்து சினிமாவின் ஜாம்பவான்களாக இருப்பது கமல்ஹாசன் மற்றும் ரஜினி மட்டும் தான். இத்தனை வருடங்கள் கழிந்தும் ரஜினிகாந்த் இன்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். பலப் பேர் இந்த சினிமாத்துறையில் நாயகர்களாக வரவேண்டும் என்று வந்து சிலப்படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன எத்தனையோ நடிகர்களை பார்த்து இருக்கிறோம். 1975 ஆரம்பித்த திரைப்பயணத்தை இன்றும் 50 வருடங்களாக தன்னுடைய நிலையை தக்கவைத்து இருக்கிறார் ரஜினிகாந்த்.
கமல்ஹாசன் தமிழ் சினிமாவை உலகமெங்கும் கொண்டு சென்ற ஒரு உலகநாயகன், தான் நடிக்கும் படங்களாக இருக்கட்டும், இல்லை இயக்கும் படங்களாக இருக்கட்டும் எது செய்தாலும் அதனை உலக தரத்தில் செய்வது அவரது வழக்கம். 70 வயது ஆனாலும் இன்னும் துடிப்புடன் பலப் படங்களை தயாரித்து மற்றும் நடித்து வருகிறார்.
இந்த இருஜாம்பாவன்களும் அவர்களின் இளம் பருவத்தில் இணைந்து 16 படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் நடிப்பில் வெளிவந்த அபூர்வ ராகங்கள்,அவள் அப்படித்தான், 16 வயதினிலே, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, தில்லு முல்லு ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரியளவில் ஹிட் ஆனது.
ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா துறையில் இருவருக்கும் ஒரு பெரிய மார்க்கெட் உருவாகியதும் இருவரும் இணைந்து நடிப்பதை தவிர்த்தனர். படத்தின் ஒன்றாக நடிக்காவிட்டாலும் கலை நிகழ்ச்சிகளிலும், விருது வழங்கும் விழாவில் ஒன்றாக கலந்துக் கொள்வர். சமீபத்தில் கமல்ஹாசன் , அவர் ஏன் ரஜினிகாந்துடன் இணைந்து இத்தனை வருடங்கள் நடிக்கவில்லை, எதிர்காலத்தில் நீங்கள் ஒன்றாக நடிப்பதற்கோ இல்லை கவுரவ தோற்றத்தில் நடிப்பதற்கு எதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதற்கு அவர் " நாங்கள் இணைந்து நடிப்பது என்பது புதிதில்லை, நாங்கள் பலப் படங்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளோம். ஆனால் ஒருக்கட்டத்தில் நாங்கள் ஒன்றாக இணைந்து நடிக்கக் கூடாது என்ற முடிவை எடுத்தோம். நாங்கள் போட்டியிடும் போட்டியாளர்கள் கிடையாது. துறையில் எப்பொழுதும் போட்டிகள் நிலவுவது சகஜம் தான், அவருடைய பாதை வேறு என்னுடைய பாதை வேறு. இதை நாங்கள் இப்பொழுதல்ல எங்களுடைய இளம் வயதில் எடுத்துக் கொண்ட முடிவு" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்