search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருஷ்டி"

    • இம்முறையில் தான் அக்காலத்தில் உள்ளவர்கள் திருஷ்டி கழிப்பார்கள்.
    • இந்த மந்திரங்களை கூறி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு இருக்கும் திருஷ்டி அனைத்தும் விலகும்.

    திருஷ்டி என்பது மிகவும் பொல்லாதது என்று கூறுவார்கள். கல்லடி பட்டாலும் படலாம். ஆனால் கண்ணடி படக்கூடாது என்று கூறுவார்கள். ஒருவர் இயல்பாக பார்ப்பதற்கும் பொறாமை எண்ணத்துடன் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. எவர் ஒருவர், தம்மை பார்த்து தீய எண்ணத்துடனும் பொறுமையுடனும் கண் இமைக்காமல் பார்க்கிறாரோ அப்போது நமக்கு திருஷ்டி என்பது ஏற்படும். இதனை போக்குவதற்கு தான் அக்காலத்தில் உள்ளவர்கள் திருஷ்டி கழிக்கும் முறை என்று செய்து வந்தார்கள். கல் உப்பு, வர மிளகாய், கடுகு, எலுமிச்சை பழம் என பல பொருட்களை கொண்டு மந்திரம் திருஷ்டி கழிப்பார்கள். அப்படி திருஷ்டி கழிக்கும் போது ஒரு மந்திரத்தை கூறுவார்கள்.

    அந்த மந்திரத்தை கூறி திருஷ்டி கழிக்கும் போது எந்த விதமான திருஷ்டியாக இருந்தாலும் நம்மை விட்டு நீங்கி விடும்.

    திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய தமிழ் மந்திரம்:

    பாம்பு கண்ணு, பல்லி கண்ணு பல்லியோட போ

    பேய் கண்ணு பிசாசு கண்ணு பேயோட போ

    பிச்சை கண்ணு திரிச்ச கண்ணு தீயோட போ

    உங்கள் குடும்பத்தில் திருஷ்டி அதிகமாக உள்ளவர்களை கிழக்கு பார்க்க உட்கார வைத்து உப்பு, வர மிளகாய் மற்றும் கடுகு கொண்டு தலையை இடது புறமாக மூன்று முறையும், வலது புறமாக மூன்று முறையும் சுற்ற வேண்டும். அப்படி சுற்றும்போது இந்த மந்திரத்தை மூன்று கூற வேண்டும். அதன் பிறகு, திருஷ்டி கழித்த பொருட்களை தீயில் போட்டு விட வேண்டும். இம்முறையில் தான் அக்காலத்தில் உள்ளவர்கள் திருஷ்டி கழிப்பார்கள்.

    மேலும், நீங்கள் எலுமிச்சைப்பழம் கொண்டு திருஷ்டி கழிக்கும்போது பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை கூறி திருஷ்டி கழிக்க வேண்டும்.

    மஞ்சள் வர்ண புளித்த மாரி!

    ரத்த வீர ராசா கன்னி,

    மனம் கொண்ட பூமி நிஷ்ட மாரி வா!வா!

    இவ்வாறு நீங்கள் திருஷ்டி கழிக்கும்போது இந்த மந்திரங்களை கூறி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு இருக்கும் திருஷ்டி அனைத்தும் விலகும்.

    ×