search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லட்சுமி மஞ்சு"

    • நான் ஏற்கனவே 30 பள்ளிகளை தத்தெடுத்தேன்.
    • இப்போது மேலும் 20 பள்ளிகளை தத்தெடுத்து இருக்கிறேன்.

    தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு தமிழில் கடல், இஞ்சி இடுப்பழகி, காற்றின் மொழி ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

    இன்னொரு புறம் சினிமாவைத் தாண்டி சமூகசேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே அரசு பள்ளிகளை தத்தெடுத்து மாணவ, மாணவிகளுக்கு உதவிகளை செய்து வருகிறார்.

    தற்போது தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் மேலும் 20 பள்ளிகளை தத்தெடுத்து இருக்கிறார். இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறும்போது, "நான் ஏற்கனவே 30 பள்ளிகளை தத்தெடுத்தேன். இப்போது மேலும் 20 பள்ளிகளை தத்தெடுத்து இருக்கிறேன்.

    மொத்தம் 50 பள்ளிகளை தத்தெடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. தனியார் பள்ளிகளில் இருக்கும் வசதிகளை அரசு பள்ளிகளிலும் கொண்டு வரவே தத்தெடுத்து இருக்கிறேன். பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். கடந்த வருடம் 30 பள்ளிகளுக்கு அதை செய்தோம்.

    எத்தனையோ பேர் படித்து நல்ல நிலையில் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பள்ளியை தத்தெடுத்தால் ஊரையே மாற்றி விடலாம்'' என்றார்.

    • தயாரிப்பாளர்களை நிர்ப்பந்திப்பதாக சர்ச்சைகள்.
    • தயாரிப்பாளர் கஷ்டத்தை உணர்ந்து நடக்க வேண்டும்.

    நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்கு வரும்போது நிறைய உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கும் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்களை நிர்ப்பந்திப்பதாக சர்ச்சைகள் கிளம்பி உள்ளன.

    இந்த நிலையில் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து நடிகை கீர்த்தி சனோன் கூறும்போது, "நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்கு வரும்போது அவர்களுடன் எத்தனைபேர் இருக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை ஏற்படுத்த வேண்டும்.

    அதிகம்பேரை அழைத்து வருவதால் தயாரிப்பாளருக்கு படப்பிடிப்பில் அதிகம் செலவு ஏற்படும். தயாரிப்பாளர் கஷ்டத்தை உணர்ந்து நடக்க வேண்டும்'' என்றார்.

    நடிகை லட்சுமி மஞ்சு கூறும்போது, "ஹாலிவுட் செட்டில் நடிகர்களே அவர்களது இருக்கைகளை கொண்டு வந்து போட்டுக் கொள்வார்கள். நம்ம ஊரில் நடிகை அல்லது நடிகர் வந்தால் நாற்காலியை நகர்த்த கூட உதவியாளர் இருப்பார்.

    ஹாலிவுட் நடிகர் நடிகைகள் பக்கத்தில் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட், ஒரு ஹேர் டிரஸ்ஸர் மட்டும்தான் இருப்பார்கள். மிகக் குறைந்த பேருடன் வேலை நடக்கும். நம்ம ஊரில் ஒரு ஹேர் டிரஸ்ஸர் இருந்தால் அவருக்கு ஒரு அசிஸ்டன்ட், ஒரு மேக் அப் ஆர்டிஸ்ட் இருந்தால் அவருக்கு ஒரு அசிஸ்டன்ட் இருப்பார்கள். இப்படி வீண் செலவு எதற்கு என்பதுதான் கேள்வி. பெரிய நடிகர் நடிகைகள் ஒரு படை வைத்துக் கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்''என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×