search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சம்"

    • நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இன்றைய இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது.
    • இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது.

    நேற்று [ஜூலை 2] மும்பை பங்குச் சந்தை குறியீட்டு [BSE] சென்செக்ஸ் 79,856 என்று சாதனையை எட்டிய பின்னர் 31 புள்ளிகள் குறைந்து 79,441 என்ற புள்ளிகணக்கில் முடிவடைந்தது. மேலும் நேற்றைய தினம் தேசிய பங்குச் சந்தை குறியீடு எண் [NSE] நிஃப்டி குறியீடு 24,124 என்ற புள்ளிகணக்கில் நிலைபெற்று முடிவடைந்தது.

    இந்நிலையில் நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 574 புள்ளிகள் அதிகரித்து 80,015 புள்ளிகணக்கிலும் நிஃப்டி 172 புள்ளிகள் அதிகரித்து 24,296 என்ற புள்ளிகணக்கிலும் தற்போது வர்த்தகமாகி வருகிறது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 80,000 புள்ளிகளைக் கடப்பது இதுவே முதல் முறை ஆகும்.

     

    HDFC வங்கியால் இந்த உயர்வு ஏற்பட்டு உள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் நெஸ்லே ஆகியவை அதிக லாபத்தைப் பெற்றுள்ளன.  

     

    ×