என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓடிடி படம்"

    • ஜென் Z பிரிவினரின் நவநாகரீக வாழ்க்கை எப்படி உள்ளது என இந்த படம் பிரதிபலிக்கிறது.
    • ஆங்கிலம், இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியானது.

    எம் டிவி ஒரிஜினல் படைப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரைம்டைம் வித் தி மூர்த்திஸ் ஓடிடி தொடர் இன்று மாலை வெளியாகியுள்ளது.

    90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் பிரச்சனைகளை தாண்டி சமீப காலமாக அதிக பிரச்சனைகளை சந்தித்து வரும் ஜென் Z பிரிவினரின் நவநாகரீக வாழ்க்கை எப்படி உள்ளது என இந்த படம் பிரதிபலிக்கிறது.

    அவர்கள் சந்திக்கும் சவால்களை காமெடி கலந்த கருத்துள்ள தொடராக ரசிகர்களுக்கு வழங்க எம் டிவி எடுத்துக் கொண்ட பெரும் முயற்சி தான் 'பிரைம்டைம் வித் தி மூர்த்திஸ்'.

    இந்தத் தொடர் பார்வையாளர்களுக்கு அவர்களின் கருத்து நோக்கங்களை இடைநிறுத்தி நகர்ப்புற வாழ்க்கையின் சவால்களைப் பிரதிபலிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

    இந்த தொடர் இன்று ஜியோ சினிமா பிரீமியத்தில் மாலை ஆங்கிலம், இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியானது.

    'பிரைம் டைம் வித் தி மூர்த்திஸ்' படத்தின் இயக்குநரும், சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை வென்ற இளைய திரைப்படத் தயாரிப்பாளருமான அரவிந்த் சாஸ்திரி, இந்த தொடர் குறித்து உற்சாகமாக பகிர்ந்துள்ளார்.

    • அமரன், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
    • அமரன் நாளை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாவுள்ளது.

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அமரன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

    ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

    இதைதொடர்ந்து, அமரன் நாளை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாவுள்ளது.

    இந்நிலையில், அமரன் படத்தில் தனது செல்போன் எண்ணை பயன்படுத்தியதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மாணவர் வாகீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இதுதொடர்பான மனுவில், " சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் தன்னுடயை மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அந்த மனுவில், மொபைல் எண் வரும் காட்சியை நீக்கக் கோரி ஏற்கனவே தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் தவறை திருத்தவில்லை.

    அதனால், படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கவும், தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

    ×