என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைலாசா நாடு"

    • ஆன்மிக AI செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக நித்யானந்தா தகவல்
    • Youtube Live கமென்ட் ஒன்றை நித்யானந்தா படித்து காட்டினார்

    பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகளில் கர்நாடகா மற்றும் அகமதாபாத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாடு தப்பி ஓடினார்.

    அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அங்கு குடியேற விண்ணப்பிக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

    ஈக்வடார் அருகே உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி அவர் அந்த தீவுக்கு கைலாசா நாடு என பெயரிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தியதோடு கைலாசா நாட்டுக்கான சர்வதேச தூதர்களையும் அறிவித்தார். ஆனால் இல்லாத நாட்டுக்கு அவர் பெயர் சூட்டுவதாக பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நித்யானந்தா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், அவர் உயிரிழந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    இது தொடர்பாக நித்யானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேசஸ்வரன் நேற்று வீடியோ கான்பரசிங் மூலம் பிரசங்கம் செய்தார். அப்போது இந்து தர்மத்தை காப்பதற்காக நித்யானந்தா உயிர் தியாகம் சமாதி அடைந்து விட்டதாக அறிவித்தார். இது நித்யானந்தாவின் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நித்யானந்தா நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளார், நித்யானந்தா இறந்துவிட்டதாக பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன என்று கைலாசா முகநூல் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து, இன்று அதிகாலை யூடியூப் நேரலையில் பேசிய நித்யானந்தா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    யூடியூப் நேரலையில் பேசிய நித்யானந்தா பேசியவை:-

    இன்று, ஏப்ரல் 3, வியாழக்கிழமை இந்திய நேரப்படி 4.39 மணிப்படி நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    கடந்த 2 ஆண்டுகளாக இந்து சாஸ்திரங்களுதான் உலகின் முதல் ஆன்மிக AI செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தேன். அதனால் நேரலையில் வருவதை குறைத்து கொண்டேன்

    பலபேர் கைலாசாவை கட்டுப்படுத்த நினைத்தாலும் அவர்கள் நினைக்கும் போக்கிலே கைலாசாவை நடத்த நினைத்தாலும் அது நடக்காமல் போவதால் அவர்களுக்கு ஏற்படும் கோபம், அவர்கள் நடத்தும் தாக்குதல்களை நான் அறிவேன். ஆனாலும் அண்ணாமலையார் (இறைவன்) சொல்வதைத்தான் செய்வேன்"

    மற்ற நாடுகளின் உள்நாட்டு பிரச்னைகள் பற்றி கேள்வி கேட்பார்கள் என்பதால் மட்டுமே நேரலையில் பேட்டி கொடுப்பதை தவிர்க்கிறேன். கைலாசா பற்றியும் என்னை பற்றியும் கேட்டால் எப்போதும் பதில் தர காத்திருக்கிறேன்"

    என்று தெரிவித்தார்.

    மேலும், இது தான் நேரலையில் தான் பேசுகிறேன் என காட்டுவதற்கு Youtube Live கமென்ட் ஒன்றை நித்யானந்தா படித்து காட்டினார்

    • நித்யானந்தா உயிரிழந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது
    • நித்யானந்தா மீது இந்துவிரோத சக்திகளால் 70க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

    பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகளில் கர்நாடகா மற்றும் அகமதாபாத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாடு தப்பி ஓடினார்.

    அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அங்கு குடியேற விண்ணப்பிக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

    ஈக்வடார் அருகே உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி அவர் அந்த தீவுக்கு கைலாசா நாடு என பெயரிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தியதோடு கைலாசா நாட்டுக்கான சர்வதேச தூதர்களையும் அறிவித்தார். ஆனால் இல்லாத நாட்டுக்கு அவர் பெயர் சூட்டுவதாக பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நித்யானந்தா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், அவர் உயிரிழந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    இது தொடர்பாக நித்யானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேசஸ்வரன் நேற்று வீடியோ கான்பரசிங் மூலம் பிரசங்கம் செய்தார். அப்போது இந்து தர்மத்தை காப்பதற்காக நித்யானந்தா உயிர் தியாகம் சமாதி அடைந்து விட்டதாக அறிவித்தார். இது நித்யானந்தாவின் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நித்யானந்தா நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளார், நித்யானந்தா இறந்துவிட்டதாக பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன என்று கைலாசா முகநூல் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த பதிவில், "பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு எதிரான, இந்துவிரோத ஊடகங்களின் சட்டவிரோதமான பொய் தகவல் பிரச்சாரத்திற்கு கைலாஸா கண்டனம் தெரிவிக்கிறது.

    பல இந்துவிரோத ஊடக நிறுவனங்கள் வேண்டுமென்றே, தீய நோக்கத்துடன், சட்டவிரோதமான முறையில், ஜகத்குரு மஹா சன்னிதானம் (SPH) பகவான் நித்யானந்த பரமசிவம் தனது உடலை விட்டு பிரிந்துவிட்டதாக பொய் தகவல் வெளியிட்டுள்ளனர்.

    பகவான் நித்யானந்த பரமசிவம் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், உயிருடனும், உத்வேகத்துடனும் இருப்பதாக கைலாஸா உறுதியாக அறிவிக்கிறது.

    மார்ச் 30, 2025 அன்று, பகவான் நித்யானந்த பரமசிவம் உகாதி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு அனைத்து பக்தர்கள், சீடர்கள் மற்றும் 2 பில்லியன் இந்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் அளித்தார்.

    பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை இழிவுபடுத்தவும் அவதூறு செய்யவும் தொடுக்கப்பட்ட இந்த தீய அவதூறு பிரச்சாரத்தை கைலாஸா திட்டவட்டமாக கண்டனம் செய்கிறது.

    ஒருங்கிணைந்த அவதூறு பிரச்சாரத்தின் ஒரு பகுதியான இந்த தீய, சட்டவிரோதமான வெளியீடுகள் உலகளவில் 2 பில்லியன் இந்து பக்தர்களின் மத உணர்வுகளை காயப்படுத்தியுள்ளன.

    இந்த தவறான தகவல் பிரச்சாரம், சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்ட மத சிறுபான்மையினரை முறையாக தாக்குவதை நோக்கமாக கொண்ட பரந்த குற்றவியல் சதியின் ஒரு பகுதி மட்டுமே.

    இந்த பிரச்சாரம் ஊடக அவதூறு, வெறுப்பு பேச்சு, மற்றும் ஒருங்கிணைந்த சட்டபோர் மூலம் தொடுக்கப்படும் இனப்படுகொலை நோக்கத்தின் தெளிவான அடையாளங்களை கொண்டுள்ளது.

    இந்த அவதூறு பிரச்சாரத்தின் நேரம், மற்றும் பல ஊடக சேனல்கள் மூலமாக ஒருங்கிணைந்த வெளியீடு, தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை அதிகரிக்க வேண்டுமென்றே செய்யப்பட்ட உத்தியை குறிக்கிறது.

    பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மீது இந்துவிரோத சக்திகளால் 70க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

    நேரடி வழிகளில் தோல்வியடைந்ததால், இந்துவிரோத சக்திகள் இப்போது சட்டவிரோத போரை நாடுகின்றனர், இந்துவிரோத ஊடகங்களைப் பயன்படுத்தி பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் தனது உடலை விட்டு சென்றுவிட்டதாக தீய வதந்திகளை பரப்புகின்றனர். இந்துவிரோத கூட்டணியின் ஊடக பிரிவு இந்த பொய்யை விரைவாக கொண்டாடுவது, அவர்களின் ஆழமான வியூகத்தை வெளிப்படுத்துகிறது: பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை கொலை செய்வதற்கான ஒரு சூழ்ச்சியான திட்டத்திற்கு அடித்தளம் அமைப்பது.

    இந்த ஒருங்கிணைந்த, சட்டவிரோத, அவதூறு தகவல் பிரச்சாரம் ஒரு "சட்டபோர்" - ஒரு மத சமூகத்தை துன்புறுத்த சட்ட செயல்முறைகளை ஆயுதமாக்குதல். இது பின்வருவனவற்றால் நிரூபிக்கப்படுகிறது:

    பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு எதிரான சட்டபோருடன் அவதூறு வெளியீடுகள் உடனமைந்த நேரம். தொடர் தாக்குதலுக்கும் சட்டபோருக்கும் அடிப்படையாக பயன்படுத்தப்படும் அவதூறு தகவல்களை வெளியிடும் முறை.

    நம்பகத்தன்மையை உருவாக்க பல தளங்களில் தவறான கருத்துக்களை ஒருங்கிணைந்து வெளியிடுதல்.

    கைலாஸா அனைத்து ஊடக நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை - இந்துவிரோத, சட்டவிரோதமான, தகவல் பிரச்சாரம் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலை வேண்டுமென்றே பரப்பும் - இந்த தீய சக்திகளை கண்காணிக்க அழைக்கிறது" என்று பதிவிடப்பட்டுள்ளது.

    • கைலாசா நாடு பற்றிய பரபரப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை.
    • நாட்டுக்கென தனி பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை அறிவித்தார்.

    புதுடெல்லி:

    சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாடு பற்றிய பரபரப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை.

    கடந்த 2019-ம் ஆண்டு நித்யானந்தா இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடு சென்ற நிலையில் அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    மேலும் அந்த நாட்டுக்கென தனி பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை அறிவித்தார். அதைத்தொடர்ந்து கைலாசா சார்பில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறி, இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலை தளங்களில் அவரது சிஷ்யைகள் பதிவிட்டனர்.

    அதோடு, கைலாசா நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்துள்ளதாக கூறியிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கைலாசா சார்பில் பேசிய பெண் பிரதிநிதிகளின் பேச்சு நீக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை சார்பில் அறிவிக்கப்பட்டது. இல்லாத ஒரு நாட்டின் பெயரில் நித்யானந்தாவும், அவரது சிஷ்யைகளும் ஒரு பிம்பத்தை உருவாக்கி வருவதாக சமூக வலைதளங்களில் ஏராளமானோர் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்நிலையில் கைலாசா இருக்கும் இடத்தை வருகிற 21-ந்தேதி அறிவிக்க போவதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், கைலாசா திறக்கப்பட்டுள்ளது. வருகிற 21-ந்தேதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும். உங்களை அன்போடு வரவேற்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

    மேலும் கைலாசா வாசியாக இப்போதே பதிவு செய்யுங்கள் என்று ஒரு ஆன்லைன் லிங்கும் குறிப்பிட்டுள்ளனர்.

    இதன் மூலம் கைலாசா எங்கே உள்ளது என்ற கேள்விக்கு 21-ந்தேதி விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×