search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்க்"

    • இங்கே உள்ள கதாநாயகி ஸ்வேதாவைப் பார்க்கிறேன்.கொழு கொழு என்று இருக்கிறார்.
    • அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்கள் கொழு கொழு என்று இருப்பார்கள்.

    முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்' திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

    அந்த விழாவில் கலந்த்து கொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, "தமிழ் சினிமாவில் சதி நடக்கிறது. இயக்குநர்கள் எல்லாம் நடிகர்களாகி விட்டதால், இயக்குநர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இப்போது இயக்குநர்கள் எல்லாமே நடிகர்கள் ஆகிவிட்டார்கள்.இங்கே வந்திருக்கும் ஆர்.வி. உதயகுமார், சிங்கம் புலி, சரவண சுப்பையா எல்லாரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்தப் படத்தில் பாடல் எழுதியிருப்பவர் பெயர் ராசாவாம் .அவர் எழுதிய பாடலைப் பார்க்கும்போது இனி அவர் மன்மத ராசா. அந்த அளவிற்கு எழுதி இருக்கிறார் .இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொன்னதைப் பற்றிப் பேசினார்.நாங்கள் எல்லாம் இரண்டு மணி நேரம் மூச்சு முட்டக் கதை சொல்வோம். இவர் இரண்டே வரியில் கதை சொல்லி தயாரிப்பாளரைச் சம்மதிக்க வைத்திருக்கிறார்.

    இங்கே உள்ள கதாநாயகி ஸ்வேதாவைப் பார்க்கிறேன். கொழு கொழு என்று இருக்கிறார். அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்கள் கொழு கொழு என்று இருப்பார்கள். பிறகெல்லாம் சிம்ரன், திரிஷா என்று இளைத்தவர்களாக இருப்பார்கள். கொழு கொழுவென இருந்தால் மக்களுக்குப் பிடிக்கும். இந்த கதாநாயகி ஸ்வேதா அப்படி இருக்கிறார்.

    சினிமாவில் இயக்குநருக்குக் கதைப்பிடிப்பும் கதாநாயகிக்குச் சதைப்பிடிப்பும் தேவை.

    இந்த இரண்டாவது கதாநாயகி கன்னடத்து பைங்கிளி தமிழைக் கொஞ்சி கொஞ்சிப் பேசினார். கேட்பதற்கு அழகாக இருந்தது.நாங்கள் மொழி பேதம் பார்ப்பதில்லை. சரோஜாதேவியை எல்லாம் கன்னடத்துப் பைங்கிளி என்று கொண்டாடினோம் .உங்களையும் வரவேற்போம்" என்று பேசினார். 

    • எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது.
    • சினிமா தலைசீவ வழியில்லாதவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும்.

    அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ நடராஜ் தயாரிப்பில் ஈ.கே. முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் 'பார்க்' என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் இசை மட்டும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகத் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் சிங்கம் புலி பேசும்போது, "நான் போட்டோ ஸ்டுடியோவில் பிலிம்களை டெவலப் செய்யும் டார்க் ரூமில் ஆறு மாதம் தங்கி இருந்தேன். ஒன்றுமே பார்க்க முடியாது. லைட் போட மாட்டார்கள் சின்ன சிவப்பு விளக்கு மட்டுமே எரியும். எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது."

     


    "இப்படி எல்லாம் சிரமப்பட்டுத் தான் சினிமாவுக்கு வந்தோம். இப்படிச் சிரமப்படுவது பிற்காலத்தில் நன்றாக இருப்பதற்காகத்தான். கதாநாயகன் தமன் வெளிநாட்டில் ஏர்லைன்ஸில் மாதம் 4 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர். அதையெல்லாம் விட்டுவிட்டுச் சினிமாவுக்கு வந்திருக்கிறார்."

    "சினிமா அவரைக் கைவிடாது. ஏனென்றால் அவர் சினிமாவை நேசிக்கிறார். சினிமா இரண்டு பேருக்கு வாய்ப்பு கொடுக்கும். தலை சீவ முடியாத அளவிற்கு அடர்த்தியான முடி கொண்டவர்களுக்கும், தலையில் முடியே இல்லாது தலைசீவ வழியில்லாதவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும்," என்று தெரிவித்தார்.

    இயக்குநர் முருகன் இயக்கி இருக்கும் பார்க் படத்திற்கு அமரா இசையமைக்க, பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரு நொடி' படத்தின் கதாநாயகன் தமன் குமார் நடித்துள்ளார்.
    • கதாநாயகியாக ஸ்வேதா டோரதி நடித்துள்ளார்.

     இன்றைய திரையுலகச் சூழலில் ஹாரர் படங்களுக்கு ஒரு குறைந்தபட்ச வணிக உத்திரவாதம் உண்டு. அந்த வகை நம்பிக்கையில் 'பார்க்' என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது.

    இப்படத்தை E.K.முருகன் இயக்கியுள்ளார் .இவர் இயக்குநர் ஏ. வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்து சினிமா கற்றவர். அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பாக லயன் E.நடராஜ் பார்க் படத்தைத் தயாரித்துள்ளார்.

    இப்படத்தில் கதாநாயகனாக சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஒரு நொடி' படத்தின் கதாநாயகன் தமன் குமார் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்வேதா டோரதி நடித்துள்ளார். பிரதான வில்லனாக யோகிராம் நடித்துள்ளார்.கதாநாயகியின் தந்தையாகத் தயாரிப்பாளர் லயன் ஈ.நடராஜ் நடித்துள்ளார்.இவர்களைத் தவிர காமெடியில் கலக்கி கொண்டிருக்கும் பிளாக் பாண்டி, ரஞ்சனா நாச்சியார், கராத்தே ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    திருவண்ணாமலையில் ஒரு பூங்காவில் நடைபெறும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் நடந்துள்ளது.

    படம் பற்றி இயக்குநர் ஈ.கே. முருகன் பேசும்போது,

    "இது ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் காமெடி கலந்த திரில்லர் என்ற வகையில் உருவாகியுள்ளது.

    இந்தப் படத்தின் கதையைத் தயாரிப்பாளரிடம் கூறிய போது நான் சொன்னேன். படத்தின் முதல் பாதி வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்; இரண்டாவது பாதி இதயம் வலிக்கப் பயமுறுத்தும் என்றேன்.அதன்படி கதையையும் சொன்னேன் அவருக்குப் பிடித்திருந்தது.சரியாகத் திட்டமிட்டு 36 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்து, படத்தை நிறைவு செய்திருக்கிறோம்.

    அண்மையில் வெற்றி பெற்ற ஒரு நொடி படத்தில் நடித்துள்ள தமன்குமார் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் .அதேபோல் சமீபத்தில் வெளிவந்த லாந்தர் படத்தில் நாயகியாக நடித்த ஸ்வேதா டோரத்தி நாயகியாக நடித்துள்ளார்.அதேபோல் அண்மை வெற்றிப் படமான கருடன் படத்தில் வில்லனாக நடித்த யோகிராம் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

    ஹாரர் படங்களுக்கு என்றும் வரவேற்பு இருக்கும். முதலீடு செய்யும் தயாரிப்பாளரையும் காப்பாற்றி விடும்.எனவே இந்த வகைப் படத்தை எடுக்கத் தீர்மானித்து முடித்தோம்.

    இப்படம் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். ஆகஸ்டில் இப்படத்தை வெளியிடுவதாகத் திட்டமிட்டு இருக்கிறோம்" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×