என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக சட்டத்துறை"

    • மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்திய தண்டனைச் சட்டம் (IPC) தற்போது பாரதீய நியாய சன்ஹிதா (BNS) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக (CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

    மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இப்போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    போராட்டத்தில் பேசிய துரைமுருகன், ''ஒன்றிய அரசு 3 சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்று சட்டங்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது. நாக்கில் தர்ப்பைப் புல்லை தேய்த்தாலும் இந்த வார்த்தைகள் வாயில் வராது. இந்த கொடுமை வேண்டாம் என்பதற்காகதான் ஆதியிலிருந்து இந்தியை நாம் எதிர்க்கிறோம்" என்று பேசினார்.

    இதனையடுத்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், "பிரிட்டிஷ் காலனிய சட்டங்களை தூக்கி எறிவதாக சொல்லித்தான் இச்சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். உண்மையில் காலனிய சட்டங்களை இயற்றிய மெக்காலேவுக்கும் சர் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜேம்ஸ் ஸ்டீஃபன்ஸுக்கும் இவர்கள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். 90 முதல் 95 சதவிகிதம் வரை அந்தச் சட்டங்களிலிருந்து copy அடித்து இதில் ஒட்டி வைத்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • ஆளுநர் ரவியின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாட்டில் கண்டனம்.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அதை எதிர்த்து வழக்கு தொடர தீர்மானம்.

    சென்னை ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க. சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது.

    சென்னை ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க. சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு நடைபெற்றது.

    இந்நிலையில், இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட வடிவை மத்திய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் என திமுக சட்டத்துறை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அதை எதிர்த்து வழக்கு தொடர தீர்மானம்.

    ஆளுநரின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்தும், ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தஇயும் தீர்மானம்.

    சட்டமன்ற நடவடிக்கைகளை புறக்கணிக்கும் ஆளுநர் ரவி, தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தீர்மானம்.

    பொறுப்பற்ற வகையில் வதந்திகளை பரப்பி வருவதாக எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம்.

    பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் சட்ட திருத்தத்திற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

    மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

    இறுதியில், தேர்தல் நிதியாக ரூ.25 லட்சத்திற்கான காசோலையை திமுக சட்டத்துறை நிர்வாகிகள் முதலமைச்சரிடம் வழங்கினர்.

    • தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் இனத்தை காக்கும் அரணாக, திமுக சட்டத்துறை திகழ்கிறது.
    • எமர்ஜென்சி காலத்தில் நான் உள்பட பலரும் சிறையில் அடைக்கப்பட்டோம்.

    திமுக சட்டத்துறை 3வது மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திமுகவில் உள்ள அணிகளில் தனித்துவமான அணி சட்டத்துறை அணி. பொய்களை தகர்த்தெறிந்து 75 ஆண்டு காலம் திமுக நிமிர்ந்து நிற்கிறது. இதற்கு தொண்டர்களின் தியாகம் தான் காரணம்.

    தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் இனத்தை காக்கும் அரணாக, திமுக சட்டத்துறை திகழ்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததும் திமுகவின் சட்டத்துறை தான்.

    எமர்ஜென்சி காலத்தில் நான் உள்பட பலரும் சிறையில் அடைக்கப்பட்டோம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களுக்கான போராட்டங்களை நடத்தியபோது வழக்குகளை சந்தித்தோம்.

    திமுகவின் சட்டத்துறை, சாதனை துறையாக விளங்கி வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தலை இறுதி வரை எதிர்த்து போராட வேண்டும். நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக திமுக சட்டத்துறை மூலம் சட்டப் போராட்டம் நடத்துகிறது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்று ஒரே பண்பாட்டிற்குள் நகர்த்துவதற்கு பாஜக முயற்க்கிறது. இந்த முறை பாஜகவுக்கும் நல்லது அல்ல, பிரதமர் மோடியை சர்வாதிகாரியாக மாற்ற தான் பயன்படும்.

    நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிட வேண்டாம். இந்திய நாட்டையும், அரசியலைப்பு சட்டத்தையும் பாதுகக்க நாம் போராடி வருகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×