search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவ பிரசாத்"

    • ராதாகிருஷ்ணன் பார்த்திபன், டீன்ஸ் என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
    • கிராபிக்ஸ் காட்சிகள் பிப்ரவரி மாதத்திற்குள் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    பிரபல நடிகரும், இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன், டீன்ஸ் என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். கோவையை சேர்ந்த ரியல் வோர்க்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர், டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான மேற்பார்வையாளராக இருந்துள்ளார்.

    இந்நிறுவனம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், லியோ, விக்ரம் போன்ற திரைப்படங்களுக்கு பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த பிப்ரவரி மாதம் 20 -ம் தேதிக்குள் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளுக்கான அனைத்து பணிகளையும் முடித்துக் கொடுப்பதாக கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு கட்டணமாக சிவபிரசாத் 68 இலட்சத்து 54 ஆயிரத்து 400 ரூபாய் கேட்ட நிலையில், பார்த்திபன் 42 இலட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.

    மேலும் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பிப்ரவரி மாதத்திற்குள் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறித்த நேரத்தில் சொன்ன பணிகளை முடிக்க முடியவில்லை.

    இதனிடையே சிவப்பிரசாத் கடந்த மாதம் நான்காம் தேதி கிராபிக்ஸ் காட்சிகளுக்கான கட்டணமாக 88 இலட்சத்து 38 ஆயிரத்து 120 ரூபாய் தொகை செலுத்த வேண்டும் என பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

    ஒப்பந்தத்தை மீறி கூடுதலாக பணம் கேட்டதும், குறிப்பிட்ட தேதியில் பணிகளை முடித்துக் கொடுக்காததும் தெரியவந்துள்ளது. இவ்வாறான சூழலில் தன்னை ஏமாற்றியதாக பார்த்திபன் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிவபிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆனால் சிவப்பிரசாத் தரப்பில் இதுக் குறித்து கூறுவது என்ன வென்றால் " பார்த்திபன் சார் பல கரெக்ஷன்களை வைத்துக் கொண்டே இருப்பார், நாங்கள் கொடுத்த காசுக்கு அதிகமாகதான் வேலை செய்துள்ளோம். சொன்ன காட்சிகளை விட அதிகமாக வேலை இருந்ததால் சொன்ன அமவுண்டை விட அதிகமாக கேட்டோம். பணத்தை பற்றி கேட்டதற்கு பணிகளை முடித்தவுடன் மொத்தமாக வாங்கிக் கொள்ளுமாரு  கூறினார். ஆனால் நாங்கள் நம்பிகைகளின் அடிப்படையில் சில காட்சிகளை தவிர்த்து 400-க்கும் மேற்பட்ட கிராபிக் காட்சிகளை அப்படத்தில்  செய்து கொடுத்துள்ளோம், அவர்கள் அந்த காட்சிகளை வைத்துதான் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியிடவுள்ளனர்," எனவும் இதனால் அவர் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று வழக்கை சிவப்பிரசாத் தொடர்ந்துள்ளார்.

    ஆனால் படக்குழு இன்னும் 6 நாட்களில் படம் வெளியாகும் என ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். படத்தின் அடுத்த பாடலான இக்கி பிக்கி பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளனர். இதனால் ஒரு போட்டா போட்டி சூழல் நடைப்பெற்று வருகிறது. இதனால் திரைப்படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×