search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் சாய் தீனா"

    • நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள். எங்களுக்கு ஜாதி, மதம், இனம் எதுவுமே கிடையாது.
    • எல்லா தரப்பு மக்களையும் அரவணைத்த மனிதரை நாங்கள் இழந்துள்ளோம்.

    படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நடிகர் சாய் தீனா இன்று அஞ்சலி செலுத்தினார்.

    அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்கள் பூர்வகுடி மக்களின் எழுச்சி நாயகன் எங்கள் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். இது எங்களுக்கு ஈடுசெய்யமுடியாத மிகப்பெரிய இழப்பு. எங்கள் அண்ணன் இருந்தபோது எங்களுக்கு எல்லாமே இருந்தது. இப்போது எங்களின் மொத்த அதிகாரமும் போய்விட்டது. எங்கள் அண்ணனை இழந்த பிறகு மீண்டும் 100 வருடம் பின்னாடி போனது போல எங்களுக்கு பயம் வந்துள்ளது.

    நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள். எங்களுக்கு ஜாதி, மதம், இனம் எதுவுமே கிடையாது. எங்களுக்கு மனிதநேயம் மட்டும்தான் உள்ளது. எங்கள் முன்னாடி யார் இருந்தாலும் அவர்களை மனிதர்களாக மட்டும் தான் பார்ப்போம். எந்த அடையாளமும் இல்லாத மனிதர்களாக வாழ ஆசைப்படும் மக்கள் நாங்கள். இது அம்பேத்கர் சொன்ன வார்த்தை.

    எங்களுக்கு சாதி, மத, இனம், பேதம் எதுவுமே கிடையாது. எல்லா மனிதர்களையும் நேசிப்பவர்கள் நாங்கள். எங்களுக்கு சாதியில்லை. எங்களை பார்ப்பவர்கள் தான் சாதியாக அடையாளப்படுகிறார்கள். இங்கிருந்த எல்லா தரப்பு மக்களையும் அரவணைத்த மனிதரை நாங்கள் இழந்துள்ளோம்" என்று உருக்கமாக தெரிவித்தார்.

    ×